திங்கள், 26 ஜூன், 2023

பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம் இணையம் வழியாக நடத்தும் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளுபவர்களுக்கான 
நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் -

கோவைபாலாஜி கணினி வரைகலைப் பயிலகம் வழங்கும் - இணையம் வழி பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்பும் தங்களுக்கு எங்களது நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகுக.

குறிப்பிட்ட மென்பொருளுக்கான விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ள நாட்களில் இந்தப் பயிற்சி வகுப்பு நடைபெறும். ஞாயிற்றுக்கிழமைகள், பண்டிகை விடுமுறை நாட்கள், எதிர்பாராத விடுமுறை நாட்களில் மட்டும் வகுப்பு கிடையாது. தேவையென்றால் பயிற்சிக்கான காலம் நீடிக்கப்படலாம்.

விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ள நேர முறைப்படி அந்த நேரம் முதல் பயிற்சி நடத்தப்படும்.

தினசரி குறைந்தது 40 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரையிலும் அல்லது அதற்கு மேலாகவும் விளக்கவுரை தரப்படும். நிகழ்ச்சியின் இடையில் தேவையான இடங்களில் குறிப்பிட்ட மென்பொருள் தொடர்பான உங்களது ஐயங்களுக்கு விடை தரப்படும்.

விடுமுறை எடுக்காமல் பயிற்சியில் கலந்து கொண்டு பலன்பெற வேண்டும். தகவல் தெரிவித்தோ, தெரிவிக்காமலோ விடுமுறை எடுத்தால் அந்த நாளுக்கான வகுப்பு வேறு எந்த வகையிலும் மீண்டும் நடத்தப்பட மாட்டாது. 

தினசரி குறிப்பிட்ட நேரத்திற்கு 5-10 நிமிடங்கள் முன்பாக ஜூம் இணைப்பில் அட்மிட் துவங்கப்படும்.

விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு மிகச் சரியாக வகுப்பு துவங்கிவிடும். தாமதமாக வருவது கூடாது. நிகழ்ச்சியில் இணைவதற்கான எந்தவொரு நினைவூட்டலும் கொடுக்கப்படமாட்டாது. சரியான நேரத்திற்கு நிகழ்ச்சியில் இணைந்து கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு ஆகும்.

பயிற்சி வகுப்பிற்கான ஜூம் செயலியின் ஐடி - பாஸ்வேர்ட் ஆகியன நிகழ்ச்சி துவங்குவதற்கு முதல் நாள் இரவு அல்லது நிகழ்ச்சி துவங்கும் நாளன்று காலையில் டெலிகிராம் குழு வழியாக மட்டும் பகிரப்படும். பயிற்சியில் இணைபவர்களுக்குத் தனித்தனியாக எந்தவொரு செய்தியும் அனுப்பப்படமாட்டாது.

எங்கள் தரப்பில் இணையத் தொடர்பாலோ அல்லது வேறு எதிர்பாராத நிகழ்வினாலோ பயிற்சியில் தடங்கல் ஏற்பட்டால் அடுத்து வரும் நாட்களில் அது சமன் செய்யப்படும்.

பயிற்சி தொடர்பாக எந்தவொரு காணொளிஒலித்துண்டுகள்பாடங்கள் உள்ளிட்டவை பகிரப்படுவதில்லை.

பயிற்சியின் போது தேவையென்றால் குறிப்பு எடுத்துக் கொள்ளலாம்.

நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பாகவே உங்களது மைக்ஸ்பீக்கர் ஆகியன செயல்படுவதை உறுதி செய்து கொண்டிருக்க வேண்டும். ஜூம் செயலியில் உள்ள செட்டிங்ஸ் பகுதியில் தரப்பட்டுள்ள ஆடியோ பகுதியில் உள்ளவற்றை செயல்படுத்தி அமைப்புகளை சரி செய்து கொள்ளுங்கள்.

நிகழ்ச்சியின் போது செல்பேசி வழியாக டெலிகிராமில் செய்திகள் அனுப்புவது கூடாது. அனுப்பினாலும் நிகழ்ச்சி முடிந்த பிறகுதான் அவற்றை பார்த்து பதில் தரமுடியும். நிகழ்ச்சியின்போது வேறு எதிலும் கவனத்தை செலுத்து முடியாது.

தேவையென்றால் ஜூம் செயலியில் உள்ள சாட் பகுதி வழியே தகவல் தரலாம். அல்லது ஹேண்ட் ரைஸ் குறியை வெளியிடலாம். எனினும் இடையில் தகுந்த வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே உங்களது கேள்விகளுக்கு பதில் தரமுடியும். என்றாலும் நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பாகவும் பயிற்சி விளக்கம் முடிந்த பிறகும் உங்களது ஐயங்களுக்கு விடை தர முடியும்.

ஒரு முறை செலுத்திய கட்டணத்தை வேறு எந்தவொரு கணக்கிற்கும், நபருக்கும் மாற்றுவது இயலாது. கட்டணம் செலுத்திய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலவில்லையென்றால் அதற்காக நமது பயிலகம் எந்த வகையிலும் இழப்பு தர இயலாது. வேறு நாட்களில், வேறு வகுப்புகளில், வேறு குழுவில் இணைத்துவிடுவது உள்ளிட்ட எந்தவொரு வகையிலும் இழப்பு ஈடு செய்ய முடியாது. குறிப்பிட்ட நாளில் நடக்கும் குறிப்பிட்ட மென்பொருளுக்கான பயிற்சி வகுப்பில் குறிப்பிட்ட நேரத்தில் கலந்துகொண்டு பயன்பெறவேண்டியது உங்கள் பொறுப்பு. 

இந்தக் கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும் உங்களுக்கு ஏற்புடையதாக இல்லையென்றால், நிகழ்ச்சி துவங்குவதற்கு 1 நாள் முன்பாக இதுபற்றி தெரிவித்தால் நீங்கள் செலுத்திய கட்டணம் முழுமையாகத் திருப்பித் தரப்படும். நிகழ்ச்சியிலிருந்து நீங்கள் முற்றிலுமாக வெளியேறிக் கொள்ளலாம். நிகழ்ச்சிக்கான ஜூம் இணைப்பு ஐடி-பாஸ்வேர்ட் பகிரப்பட்டபிறகு எந்தக் காரணத்தை முன்னிட்டும் விலகுவதற்கு அனுமதி இல்லை. விலகினால் கட்டணம் பகுதியாகவோ, முழுமையாகவோ திருப்பித் தரவோ வேறு வகைகளில் சரி செய்து கொள்ளவோ இயலாது. கவனம் தேவை.

பயிற்சி வகுப்பிற்குப் பிறகு அது தொடர்பான ஐயங்கள், கேள்விகள் போன்றவற்றை டெலிகிராம் வழியாக மட்டுமே நமது எண்ணிற்கு அனுப்பிப் பதில் பெறலாம். தொலைபேசி வழியாகத் தொடர்பு கொண்டால், அதற்கு பதில் தரமுடியும் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. ஆனால் டெலிகிராம் வழியாக அனுப்பும் எந்தவொரு செய்திக்கும் கண்டிப்பாக, தாமதமானாலும் பதில் தருவதற்கு உறுதியளிக்கிறோம்.

Never Stop Listening...

Never Stop Learning...

Never Stop Training. 

வாருங்கள் இணைந்தே பயிலுவோம்... வளருவோம்.

பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம் இணையம் வழியாக நடத்தும் எல்லாவகையான பயிற்சி வகுப்புகளுக்கும் இந்த நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும் பொருந்தும்.

இங்கு வெளியிடப்பட்டுள்ள நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும் எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் மாறுதலுக்கு உட்பட்டவை.

இந்த நிகழ்ச்சிகள் மற்றும் இது தொடர்பான செயல்பாடுகள் அனைத்தும் கோயம்புத்தூர் நகர சட்ட எல்லைக்குட்பட்டவை.


பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம்-காக

ஜெ.வீரநாதன்

99444-13782