திங்கள், 26 ஜூன், 2023

பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம் இணையம் வழியாக நடத்தும் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளுபவர்களுக்கான 
நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் -

கோவைபாலாஜி கணினி வரைகலைப் பயிலகம் வழங்கும் - இணையம் வழி பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்பும் தங்களுக்கு எங்களது நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகுக.

குறிப்பிட்ட மென்பொருளுக்கான விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ள நாட்களில் இந்தப் பயிற்சி வகுப்பு நடைபெறும். ஞாயிற்றுக்கிழமைகள், பண்டிகை விடுமுறை நாட்கள், எதிர்பாராத விடுமுறை நாட்களில் மட்டும் வகுப்பு கிடையாது. தேவையென்றால் பயிற்சிக்கான காலம் நீடிக்கப்படலாம்.

விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ள நேர முறைப்படி அந்த நேரம் முதல் பயிற்சி நடத்தப்படும்.

தினசரி குறைந்தது 40 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரையிலும் அல்லது அதற்கு மேலாகவும் விளக்கவுரை தரப்படும். நிகழ்ச்சியின் இடையில் தேவையான இடங்களில் குறிப்பிட்ட மென்பொருள் தொடர்பான உங்களது ஐயங்களுக்கு விடை தரப்படும்.

விடுமுறை எடுக்காமல் பயிற்சியில் கலந்து கொண்டு பலன்பெற வேண்டும். தகவல் தெரிவித்தோ, தெரிவிக்காமலோ விடுமுறை எடுத்தால் அந்த நாளுக்கான வகுப்பு வேறு எந்த வகையிலும் மீண்டும் நடத்தப்பட மாட்டாது. 

தினசரி குறிப்பிட்ட நேரத்திற்கு 5-10 நிமிடங்கள் முன்பாக ஜூம் இணைப்பில் அட்மிட் துவங்கப்படும்.

விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு மிகச் சரியாக வகுப்பு துவங்கிவிடும். தாமதமாக வருவது கூடாது. நிகழ்ச்சியில் இணைவதற்கான எந்தவொரு நினைவூட்டலும் கொடுக்கப்படமாட்டாது. சரியான நேரத்திற்கு நிகழ்ச்சியில் இணைந்து கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு ஆகும்.

பயிற்சி வகுப்பிற்கான ஜூம் செயலியின் ஐடி - பாஸ்வேர்ட் ஆகியன நிகழ்ச்சி துவங்குவதற்கு முதல் நாள் இரவு அல்லது நிகழ்ச்சி துவங்கும் நாளன்று காலையில் டெலிகிராம் குழு வழியாக மட்டும் பகிரப்படும். பயிற்சியில் இணைபவர்களுக்குத் தனித்தனியாக எந்தவொரு செய்தியும் அனுப்பப்படமாட்டாது.

எங்கள் தரப்பில் இணையத் தொடர்பாலோ அல்லது வேறு எதிர்பாராத நிகழ்வினாலோ பயிற்சியில் தடங்கல் ஏற்பட்டால் அடுத்து வரும் நாட்களில் அது சமன் செய்யப்படும்.

பயிற்சி தொடர்பாக எந்தவொரு காணொளிஒலித்துண்டுகள்பாடங்கள் உள்ளிட்டவை பகிரப்படுவதில்லை.

பயிற்சியின் போது தேவையென்றால் குறிப்பு எடுத்துக் கொள்ளலாம்.

நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பாகவே உங்களது மைக்ஸ்பீக்கர் ஆகியன செயல்படுவதை உறுதி செய்து கொண்டிருக்க வேண்டும். ஜூம் செயலியில் உள்ள செட்டிங்ஸ் பகுதியில் தரப்பட்டுள்ள ஆடியோ பகுதியில் உள்ளவற்றை செயல்படுத்தி அமைப்புகளை சரி செய்து கொள்ளுங்கள்.

நிகழ்ச்சியின் போது செல்பேசி வழியாக டெலிகிராமில் செய்திகள் அனுப்புவது கூடாது. அனுப்பினாலும் நிகழ்ச்சி முடிந்த பிறகுதான் அவற்றை பார்த்து பதில் தரமுடியும். நிகழ்ச்சியின்போது வேறு எதிலும் கவனத்தை செலுத்து முடியாது.

தேவையென்றால் ஜூம் செயலியில் உள்ள சாட் பகுதி வழியே தகவல் தரலாம். அல்லது ஹேண்ட் ரைஸ் குறியை வெளியிடலாம். எனினும் இடையில் தகுந்த வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே உங்களது கேள்விகளுக்கு பதில் தரமுடியும். என்றாலும் நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பாகவும் பயிற்சி விளக்கம் முடிந்த பிறகும் உங்களது ஐயங்களுக்கு விடை தர முடியும்.

ஒரு முறை செலுத்திய கட்டணத்தை வேறு எந்தவொரு கணக்கிற்கும், நபருக்கும் மாற்றுவது இயலாது. கட்டணம் செலுத்திய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலவில்லையென்றால் அதற்காக நமது பயிலகம் எந்த வகையிலும் இழப்பு தர இயலாது. வேறு நாட்களில், வேறு வகுப்புகளில், வேறு குழுவில் இணைத்துவிடுவது உள்ளிட்ட எந்தவொரு வகையிலும் இழப்பு ஈடு செய்ய முடியாது. குறிப்பிட்ட நாளில் நடக்கும் குறிப்பிட்ட மென்பொருளுக்கான பயிற்சி வகுப்பில் குறிப்பிட்ட நேரத்தில் கலந்துகொண்டு பயன்பெறவேண்டியது உங்கள் பொறுப்பு. 

இந்தக் கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும் உங்களுக்கு ஏற்புடையதாக இல்லையென்றால், நிகழ்ச்சி துவங்குவதற்கு 1 நாள் முன்பாக இதுபற்றி தெரிவித்தால் நீங்கள் செலுத்திய கட்டணம் முழுமையாகத் திருப்பித் தரப்படும். நிகழ்ச்சியிலிருந்து நீங்கள் முற்றிலுமாக வெளியேறிக் கொள்ளலாம். நிகழ்ச்சிக்கான ஜூம் இணைப்பு ஐடி-பாஸ்வேர்ட் பகிரப்பட்டபிறகு எந்தக் காரணத்தை முன்னிட்டும் விலகுவதற்கு அனுமதி இல்லை. விலகினால் கட்டணம் பகுதியாகவோ, முழுமையாகவோ திருப்பித் தரவோ வேறு வகைகளில் சரி செய்து கொள்ளவோ இயலாது. கவனம் தேவை.

பயிற்சி வகுப்பிற்குப் பிறகு அது தொடர்பான ஐயங்கள், கேள்விகள் போன்றவற்றை டெலிகிராம் வழியாக மட்டுமே நமது எண்ணிற்கு அனுப்பிப் பதில் பெறலாம். தொலைபேசி வழியாகத் தொடர்பு கொண்டால், அதற்கு பதில் தரமுடியும் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. ஆனால் டெலிகிராம் வழியாக அனுப்பும் எந்தவொரு செய்திக்கும் கண்டிப்பாக, தாமதமானாலும் பதில் தருவதற்கு உறுதியளிக்கிறோம்.

Never Stop Listening...

Never Stop Learning...

Never Stop Training. 

வாருங்கள் இணைந்தே பயிலுவோம்... வளருவோம்.

பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம் இணையம் வழியாக நடத்தும் எல்லாவகையான பயிற்சி வகுப்புகளுக்கும் இந்த நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும் பொருந்தும்.

இங்கு வெளியிடப்பட்டுள்ள நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும் எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் மாறுதலுக்கு உட்பட்டவை.

இந்த நிகழ்ச்சிகள் மற்றும் இது தொடர்பான செயல்பாடுகள் அனைத்தும் கோயம்புத்தூர் நகர சட்ட எல்லைக்குட்பட்டவை.

பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம்-காக

ஜெ.வீரநாதன்

99444-13782

வியாழன், 13 ஏப்ரல், 2023

கேன்வா - ஒருநாள் பயிற்சி வகுப்பு - 23.04.2023, ஞாயிறு

கேன்வா - ஒருநாள் பயிற்சி வகுப்பு - 23.04.2023, ஞாயிறு

 கேன்வா - அடிப்படை பயிற்சி வகுப்பு!

நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்துபவர்கள் -

பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம். தற்போது திருச்சி நகரிலிருந்து இணையம் வழியாக இந்தப் பயிற்சி வகுப்பையும், கணினி வரைகலைக்கான மென்பொருட்களுக்கான பயிற்சி வகுப்புகளையும் தொடர்ந்து நடத்தி வருகின்றார்கள். அறிந்ததைப் பகிர்ந்து கொள்வோம் - என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் நாங்கள், தற்போது பேஜ்மேக்கர், இன்டிசைன், இல்லஸ்ட்ரேட்டர், போட்டோஷாப், பிரீமியர், கோரல்டிரா, போன்ற தொழில்முறை மென்பொருட்களுக்கும், இங்க்ஸ்கேப், ஜிம்ப், ஸின்பிங் ஸ்டூடியோ போன்ற கட்டற்ற மென்பொருட்களுக்கும், கணினியின் அடிப்படை நிலையில் பயன்படுத்தப்படும் எம்.எஸ்.ஆபீஸ் மென்பொருளின், வேர்ட், எக்ஸெல், பவர்பாயின்ட், ஆக்சஸ் ஆகியவற்றிற்கும் பயிற்சி வகுப்புகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

தற்போது கேன்வா எனும் இணையம் வழியாகக் கிடைக்கும் செயலி மென்பொருளுக்கும் இணையம் வழிப் பயிற்சி வகுப்புகளைத் துவங்கி நடத்தி வருகிறோம்.

பயிற்சியின் நோக்கம் -

மாறிவரும் தொழில்நுட்பத்தை அனைத்து நிலைகளிலும் உள்ள கணினி வரைகலைஞர்களும் தங்களது வேலை நேரத்தில், அலுவலகத்திலிருந்த நேரடியாக கலந்து கொண்டு பலன்பெற வேண்டும் என்பதே அடிப்படை நோக்கமாகும்.

பயிற்சியின் சிறப்பு அம்சங்கள் -

கணினி வரைகலைக்கு முற்றிலும் புதியவர்களும், முன்பே வரைகலையில் பட்டறிவு மிக்கவர்களும் கலந்து கொள்ளலாம். கேன்வாவின் அடிப்படையிலிருந்து சொல்லிக் கொடுக்கப்படும்.

நிகழ்ச்சிக்குப் பிறகு, எந்த நிலையிலும் உங்களுக்கு ஏற்படும் ஐயங்களை டெலிகிராம் செயலி வழியாகக் கேள்வியாகக் கேட்டு முழுமையான விளக்கம் பெறலாம்.

பயிற்சி அளிப்பவர் -

திரு. ஜெ.வீரநாதன் - 33 ஆண்டுகளாக கணினி வரைகலையை பயன்படுத்தி வருவதுடன், தொடர்ந்து பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறார். கோவிட் ஊரடங்கின் காரணமாக நமக்குக் கிடைத்த புதிய வசதியான இணையம் வழியில் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார். 9 தொழில்முறை மென்பொருட்களுக்கு முழுமையான புத்தகங்களை தமிழ் மொழியில் எழுதி வெளியிட்டுள்ளார். அந்த வகையில் சிறந்த தமிழ் கணினி நூல் என்ற முதல் பரிசை தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையிடமிருந்து இரண்டு முறை பெற்றிருக்கின்றார். பல நூறு கணினி வரைகலைஞர்களை உருவாக்கியுள்ளார்.

பயிற்சி வகுப்புகள் -

கேன்வா 1.1 - இந்த வகுப்பில் கேன்வா செயலியின் துவக்கம், அடிப்படை, அச்சுத்துறைக்கு ஏற்றாற்போல வடிவமைக்கும் வழிமுறைகள், அடிப்படை அளவுகள், வண்ணம் பிரித்தல் உட்பட தேவையான அடிப்படை விளக்கங்கள் தரப்படும்.

கேன்வா 1.2 - இந்த வகுப்பில் கேன்வா செயலியை பயன்படுத்தி சமூக ஊடகங்களான முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட பகுதிகளுக்கு வடிவமைப்பு செய்யும் வழிமுறைகளும், அனிமேஷன் மற்றும் வீடியோ முறைகளும் செயல்முறையாக விளக்கப்படும்.

கேன்வா 1.3 - இந்த வகுப்பில் கேன்வா செயலியை பயன்படுத்தி வலைதளப்பக்கம் வடிவமைத்து உங்களுக்கும், வாடிக்கையாளர்களுக்குமான வலைதளங்களை உருவாக்கிக் கொடுக்கும் வழிமுறைகள் அடிப்படையிலிருந்து விளக்கிச் சொல்லப்படும்.

இந்த மூன்று வகுப்புகளும், ஒரே நாளில் காலை 10 மணிக்குத் துவங்கி, ஒவ்வொரு ஒன்றரை மணி நேரத்திற்கும் ஒரு வகுப்பு என்று தொடர்ந்து நடத்தப்படும்.

பாடத்திட்டம் -

அச்சு ஊடகம்சமூக ஊடகம்வலைதள பக்கம் வடிவமைப்பு - என்று மாறிவரும் தற்போதைய சூழலில் பயன்பாட்டில் உள்ள முறைக்கும் ஏற்றாற்போல வடிவமைப்பு செய்வதை அடிப்படையிலிருந்து எளிய தமிழில் கற்றுத்தரும் பயிற்சி வகுப்புகளாகும்.

நாட்கள், நேரம் -

1. கேன்வா 1.1 - 23.04.2023, ஞாயிற்றுக் கிழமை, காலை 10.00 - 11.30

11. 30 முதல் 11.45 வரை 15 நிமிடம் இடைவேளை

2. கேன்வா 1.2 -  23.04.2023, ஞாயிற்றுக் கிழமை, காலை 11.45 - 1.15

1.15 முதல் 1.45 வரை 30 நிமிடம் உணவு இடைவேளை

3. கேன்வா 1.1 -  23.04.2023, ஞாயிற்றுக் கிழமை, மதியம் 2.00 - 3.30

3.30 முதல் 3.45 வரை 15 நிமிடம் இடைவேளை

4. மதியம் 3.45 முதல் 5 மணி வரை பங்குபெறுவோரின் சந்தேகங்களுக்கு பதில், செயல்முறையாக விளக்கப்படும்.

கட்டணம் -

கட்டணம் ரூ. 2900 மட்டுமே. எனினும் 19.04.2023ம் தேதிக்குள் கட்டணம் செலுத்துபவர்களுக்குக் கட்டணம் ரூ. 1500 மட்டுமே. விரைந்து செயல்பட்டு 50 சதவீத கட்டணக்குறைப்புப் பலனை பெறுங்கள்.

ஒருமுறை செலுத்தப்பட்டக் கட்டணத்தை ரத்து செய்வது, திருப்பி தருவது, வேறு வகையில் சரி செய்வது, வேறு நபருக்கு மாற்றிக் கொள்ளுவது உள்ளிட்ட எதுவும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. எனவே, தயவு செய்து முழு மனதுடன் கலந்து கொள்ள விரும்புபவர்கள் மட்டும் நிகழ்ச்சியில் இணைய வேண்டுகிறோம்.

டெலிகிராம் குழு -

இந்தப் பயிற்சி வகுப்பிற்கு என்று தனியான, பிரத்தியேகமான டெலிகிராம் குழு உருவாக்கப்படும். அதில் பயிற்சியளிப்போருடன், எங்களது ஆலோசகர்களும், நலம் விரும்பும் சிலரும், கட்டணம் கட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவரும் இணைக்கப்பட்டிருப்பார்கள். உங்கள் செல்பேசி மற்றும் கணினியில் கட்டாயம் டெலிகிராம் நிறுவிக் கொண்டிருக்க வேண்டும். வாட்ஸப் கிடையாது. அந்தக் குழு வழியே மட்டுமே நிகழ்ச்சி தொடர்பான எல்லா செய்திகளும் பகிரப்படும். இதனால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுபவர்களுக்கு மட்டும் நேரடியாக தகவல் கொடுக்க முடிகிறது. மேலும் பயிற்சியைத் தொடர்ந்து நீங்கள் உருவாக்கும் கோப்புகளை அப்படியே இந்தக் குழு வழியாக பகிர்ந்து, எங்களது பின்னூட்டத்தைப் பெறலாம். இந்தக் குழுவைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளுவது உங்கள் பொறுப்பாகும்.

அந்த டெலிகிராம் குழுவழியே மட்டுமே நிகழ்ச்சிக்கான ஜூம் ஐடி - பாஸ்வேர்ட் ஆகியன பகிரப்படும்.

நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் -

அனைவரது கவனத்திற்கும். (தயவு செய்து முழுமையாகப் படித்து புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.)

நமது பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம் நடத்தும் 2023-24ஆம் நிதி ஆண்டின் முதலாவது பயிற்சி வகுப்பும்ஜூம் செயலி வழியே நடத்தப்படும் 112வது நிகழ்ச்சியுமான கேன்வா - ஒரு நாள் அடிப்படைப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ள விரும்பும் அனைவருக்கும் எங்கள் இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு அடிப்படைஉங்களது உடனடியான முன்பதிவு மட்டுமேயாகும்மிக்க நன்றி.

நிகழ்ச்சியன்று சரியாக, குறிப்பிட்ட நேரமானன காலை 10.00 மணிக்கு 10 நிமிடம் முன்பாகவே ஜூம் செயலியில் இணைப்பு கொடுக்கப்பட்டுவிடும்மேலே குறிப்பிட்ட நேரத்தில் மிகச் சரியாக நிகழ்ச்சி (விளக்கவுரைதுவங்கிவிடும்எனவே அனைவரும் சரியான நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

நிகழ்ச்சியில் இணைந்தவுடன் அனைவரும் தங்களது பெயர்ஊர்செல்பேசி எண்களைப் பதிவு செய்வது கட்டாயமாகும்ஜூம் செயலியில் உங்கள் இணைப்பின் பெயரையும் கட்டாயம் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டுகிறோம்.

நிகழ்ச்சியில் உங்களது ஆடியோ இணைப்பு துண்டிக்கப்பட்டே இருக்கும்ஏதும் கேள்விஐயம் இருந்தால் ஜூம் செயலியில் ஹேண்ட் ரைஸ் குறியை வெளியிட வேண்டும். (துவக்கத்தில் இதுபற்றிய விவரம் தரப்படும்.) விளக்கவுரையாளர் தனது உரையை நிறுத்தியதும் உங்களுக்கு ஒலி இணைப்பைக் கொடுக்கச் செய்வோம்நீங்கள் விளக்கம் கேட்டு பதில் பெறலாம்அல்லது ஜூம் செயலியின் சாட் பகுதியில் பதிவிட்டும் விளக்கம் பெறளாம்.

நிகழ்ச்சியின் ஒன்றரை மணி நேரமும் இடைவிடாமல் விளக்கவுரை நடத்தப்படும். அநேகமாக சரியான நேரத்தில் முடிந்துவிடும். எனினும் பங்குபெறுவோரின் கேள்விகளுக்கு விடை கொடுப்பதற்காக சற்று நேரம் எடுத்துக் கொள்ளப்படலாம். முடிவுநேரத்தை சரியாக வரையறுக்க இயலுவதில்லை.

தாமதமாக வருவதுதாமதமாக இணைந்துவிட்டு மீண்டும் துவக்க விளக்கங்களைக் கேட்பதுஇணைப்பு சரியில்லைஒலி சரியில்லைஒலிபெருக்கி சரியில்லை - என்பன போன்ற காரணங்களும் செயல்பாடுகளும் ஏற்றுக் கொள்ள இயலாதவையாகும்தயவு செய்து முன்னதாக உங்கள் வன்பொருட்களையும்இணைய இணைப்பையும் சரியாக அமைத்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமையாகும்.

இந்த நிகழ்ச்சிக்காக நாங்கள் பயன்படுத்துவது ஜியோ பிராட் பேண்ட் - அன்லிமிடெட் டேடா இணைப்புIntel(R) Core(TM) i5-9400F CPU @ 2.90GHz   2.90 GHz P®¨³mhº, 16ஜிபி ரேம், 28" Monitor. இதற்கு ஏற்ற வன்பொருட்கள்மற்றும் தொடர்ந்து 30 மணிநேரம் இடைவிடாமல் செயல்படும்உரிமம் பெற்ற ஜூம் இணைப்பும் ஆகும்.

என்றாலும் எங்கள் தரப்பிலிருந்து நிகழ்ச்சியின் இடையே ஏதேனும் எதிர்பாராத தடை ஏற்பட்டால்சிறிது நேரம் காத்திருந்து மீண்டும் நிகழ்ச்சி துவங்கப்படும்எந்த வகையிலாவது நிகழ்ச்சியைத் தொடர்ந்து முழுமையாக நடத்தி முடிக்க வேண்டியது எங்கள் பொறுப்பாகும்தேவையென்றால் அடுத்து வரும் ஒரு நாளில் நிகழ்ச்சியின் தொடர்ச்சி நடத்தப்படலாம்.

இந்த நிகழ்ச்சிக்காக வேறு எந்தவொரு விளக்க ஏடுகள்காணொளிகள் பகிரப்படுவதற்கு இல்லைநிகழ்ச்சியின் ஒளிப்பதிவு 3 மாதங்களுக்குப் பிறகு எங்களது யூட்யூப் சேனலில் பதிவிடப்படலாம். எனினும் இதற்கு எந்தவித உத்தரவாதமும் கிடையாது.

நிகழ்ச்சியில் ஒரு நபருக்கு ஒரு கருவிக்கு மட்டுமே இணைப்புத் தரப்படும். ஒன்றிற்கு மேற்பட்ட கருவிகள் இணைக்க அனுமதி இல்லை. உங்கள் கணினியின் வன்பொருட்களான ஸ்பீக்கர், மைக் போன்றவை சரியாக செயல்படும் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. தேவையெனில் அவற்றை சரிபார்க்க ஒருமுறை ஜூம் வழியாக இணைந்து சோதித்துப் பார்க்க நாங்கள் உதவலாம்*.

நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக எழும் ஐயங்களை டெலிகிராம் அல்லது வாட்ஸப் வழியாக எங்களைத் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்இதில் எந்தத் தடையும் இல்லை.

நிகழ்ச்சி தொடர்பான சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு திருச்சி நகர சட்ட எல்லைக்கு உட்பட்டது.

இதில் கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகள், கட்டுப்பாடுகளை எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி மாற்றுவதும், நீக்கவும், சேர்ப்பதும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்துபவர்களுக்கு உள்ள உரிமைகளாகும். இதில் எவரும் தலையிட முடியாது. தவிர்க்க முடியாத காரணங்களினால் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதும், ஒத்தி வைப்பதும், பகுதி நடத்தப்படாமல் நிறுத்தப்படுவதும் ஏற்பட்டால் அதற்கு ஒருங்கிணைப்பாளர்கள் பொறுப்பு இல்லை. இதனால் நிகழ்ச்சிக்கான கட்டணத்தை பகுதியாக அல்லது முழுமையாக திருப்பிக் கொடுப்பதும், வேறுவகையில் சரி செய்து கொள்ளுவதும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் இறுதி முடிவைச் சார்ந்ததாகும். இதில் எவரும் தலையிட முடியாது.

எனினும் நிகழ்ச்சியை எந்தவிதத் தடையும் இல்லாமல் முழுமையாக, சிறப்பாக, பங்குபெறுபவர்கள் அனைவரும் பலன்பெறும் வகையில் நடத்தி முடிக்க வேண்டும் என்பதே ஒருங்கிணைப்பாளர்களின் முதன்மையான நோக்கமாகும்.

குறிப்பு - கேன்வாவைப் பயின்று பயன்படுத்த விரும்புபவர்கள் மட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டுகிறோம். நேரம் போக்குவதற்காக, தகவல் அறிந்து கொள்ளுவதற்காக, வாகனம் ஓட்டிக் கொண்டே, செல்பேசி வழியாக ஒலியை மட்டும் கேட்பதற்காக, நடைபயிற்சின்போது, உணவருந்திக் கொண்டே நிகழ்ச்சியை செவிமடுப்பது, படுத்துக் கொண்டு பார்ப்பது - போன்ற செயல்களைச் செய்பவர்கள் தயவு செய்து நிகழ்ச்சியில் இணைய வேண்டாம். உண்மையான, அடிமனதிலிருந்து விருப்பத்துடன் வரும் இரண்டு நபர்கள் இணைந்தாலும் போதும். அதுவே எங்கள் நோக்கம். கூட்டம் சேர்க்க வேண்டும் என்று விரும்பவில்லை. நிகழ்ச்சிக்கும், நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கும் மரியாதை செய்யும் விதமாக நடந்து கொள்பவர்கள் மட்டும் நிகழ்ச்சியில் இணைய வேண்டுகிறோம். வருத்தப்பட வேண்டாம். இங்குள்ள நிபந்தனைகளையும், கட்டுப்பாடுகளையும் உருவாக்கி விளம்பரப்படுத்தும் எங்களது இந்தச் செயலுக்குக் காரணம், கடந்த காலங்களில் எங்களுக்குக் கிடைத்த சில கசப்பான அனுபவங்களே. யாரையும் காயப்படுத்தவோ, குத்திக் காட்டவோ அல்ல. நடந்தவை இனி நடக்கக்கூடாது என்பதே எங்கள் விருப்பம், நோக்கம் ஆகும்.

வாருங்கள்நிகழ்ச்சியில் சந்திக்கலாம்இது உங்களுக்கான நிகழ்ச்சிநன்றி.

மேலும் விவரங்களுக்கு - எங்கள் வலைப்பூ காண்க. http://balajiicg.blogspot.com/

எங்களைத் தொடர்பு கொள்ளவும் - ஜெ.வீரநாதன், 99444-13782

வியாழன், 23 பிப்ரவரி, 2023

கேன்வா - பயிற்சி வகுப்பு

 கேன்வா - பயிற்சி வகுப்பு!

நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்துபவர்கள் -

பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம். தற்போது திருச்சி நகரிலிருந்து இணையம் வழியாக இந்தப் பயிற்சி வகுப்பையும், கணினி வரைகலைக்கான மென்பொருட்களுக்கான பயிற்சி வகுப்புகளையும் தொடர்ந்து நடத்தி வருகின்றார்கள். அறிந்ததைப் பகிர்ந்து கொள்வோம் - என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் நாங்கள், தற்போது பேஜ்மேக்கர், இன்டிசைன், இல்லஸ்ட்ரேட்டர், போட்டோஷாப், பிரீமியர், கோரல்டிரா, போன்ற தொழில்முறை மென்பொருட்களுக்கும், இங்க்ஸ்கேப், ஜிம்ப், ஸின்பிங் ஸ்டூடியோ போன்ற கட்டற்ற மென்பொருட்களுக்கும், கணினியின் அடிப்படை நிலையில் பயன்படுத்தப்படும் எம்.எஸ்.ஆபீஸ் மென்பொருளின், வேர்ட், எக்ஸெல், பவர்பாயின்ட், ஆக்சஸ் ஆகியவற்றிற்கும் பயிற்சி வகுப்புகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

தற்போது கேன்வா எனும் இணையம் வழியாகக் கிடைக்கும் செயலி மென்பொருளுக்கும் இணையம் வழிப் பயிற்சி வகுப்புகளைத் துவங்கி நடத்தி வருகிறோம்.

பயிற்சியின் நோக்கம் -

மாறிவரும் தொழில்நுட்பத்தை அனைத்து நிலைகளிலும் உள்ள கணினி வரைகலைஞர்களும் தங்களது வேலை நேரத்தில், அலுவலகத்திலிருந்த நேரடியாக கலந்து கொண்டு பலன்பெற வேண்டும் என்பதே அடிப்படை நோக்கமாகும்.

பயிற்சியின் சிறப்பு அம்சங்கள் -

கணினி வரைகலைக்கு முற்றிலும் புதியவர்களும், முன்பே வரைகலையில் பட்டறிவு மிக்கவர்களும் கலந்து கொள்ளலாம். கேன்வாவின் அடிப்படையிலிருந்து சொல்லிக் கொடுக்கப்படும்.

நிகழ்ச்சிக்குப் பிறகு, எந்த நிலையிலும் உங்களுக்கு ஏற்படும் ஐயங்களை டெலிகிராம் செயலி வழியாகக் கேள்வியாகக் கேட்டு முழுமையான விளக்கம் பெறலாம்.

பயிற்சி அளிப்பவர்கள் -

1. திரு. ஜெ.வீரநாதன் - 33 ஆண்டுகளாக கணினி வரைகலையை பயன்படுத்தி வருவதுடன், தொடர்ந்து பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறார். கோவிட் ஊரடங்கின் காரணமாக நமக்குக் கிடைத்த புதிய வசதியான இணையம் வழியில் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார். 9 தொழில்முறை மென்பொருட்களுக்கு முழுமையான புத்தகங்களை தமிழ் மொழியில் எழுதி வெளியிட்டுள்ளார். அந்த வகையில் சிறந்த தமிழ் கணினி நூல் என்ற முதல் பரிசை தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையிடமிருந்து இரண்டு முறை பெற்றிருக்கின்றார். பல நூறு கணினி வரைகலைஞர்களை உருவாக்கியுள்ளார்.

2. திரு. கே.விஜயானந்தன் - 25 ஆண்டுகளுக்கும் மேலாக கணினி வரைகலையை பயன்படுத்தி வருகிறார். வளைகுடா நாடுகளில் பணியாற்றிய பட்டறிவு மிக்கவர். சிறந்த வரைகலைஞர். நேர்த்தியான வடிவமைப்புக்குச் சொந்தக்காரர். பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு வடிவமைப்புகளைச் செய்து கொடுத்து வருபவர். இணையம் வழிப் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருபவர்.

பயிற்சி வகுப்புகள் -

கேன்வா 1.1 - இந்த வகுப்பில் கேன்வா செயலியின் துவக்கம், அடிப்படை, அச்சுத்துறைக்கு ஏற்றாற்போல வடிவமைக்கும் வழிமுறைகள், அடிப்படை அளவுகள், வண்ணம் பிரித்தல் உட்பட தேவையான அடிப்படை விளக்கங்கள் தரப்படும்.

கேன்வா 1.2 - இந்த வகுப்பில் கேன்வா செயலியை பயன்படுத்தி சமூக ஊடகங்களான முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட பகுதிகளுக்கு வடிவமைப்பு செய்யும் வழிமுறைகளும், அனிமேஷன் மற்றும் வீடியோ முறைகளும் செயல்முறையாக விளக்கப்படும்.

கேன்வா 1.3 - இந்த வகுப்பில் கேன்வா செயலியை பயன்படுத்தி வலைதளப்பக்கம் வடிவமைத்து உங்களுக்கும், வாடிக்கையாளர்களுக்குமான வலைதளங்களை உருவாக்கிக் கொடுக்கும் வழிமுறைகள் அடிப்படையிலிருந்து விளக்கிச் சொல்லப்படும்.

இந்த மூன்று வகுப்புகளும், மூன்று நாட்களில், தினசரி 3 முறை நடத்தப்படும். ஆம், முதல் நாள் காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று நேரங்களிலும் கேன்வா 1.1 வகுப்பும், தொடர்ந்து இரண்டு நாட்களிலும் இதேபோல கேன்வா 1.2, கேனாவ் 1.3 ஆகிய இரண்டு வகுப்புகளும் நடத்தப்படும்.

இதனால் ஒரு முறை கட்டணம் செலுத்தியவர்கள் மூன்று வகுப்புகளில் எதில் வேண்டுமானாலும், உங்களுக்கு வசதிப்பட்ட நேரத்தில் கலந்து கொள்ளலாம். அல்லது மூன்று வகுப்புகளிலும் கலந்து கொள்ளலாம். எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லை. அதாவது, ஒரே ஒரு கட்டணத்தில் மூன்று முறை, 9 வகுப்புகள் மூலமாக (3x3=9) விளக்கங்களைக் கேட்டு முழுமையாகப் பயிற்சி பெறுவதற்கு, அரிய வாய்ப்பு!

பாடத்திட்டம் -

அச்சு ஊடகம், சமூக ஊடகம், வலைதள பக்கம் வடிவமைப்பு - என்று மாறிவரும் தற்போதைய சூழலில் பயன்பாட்டில் உள்ள 3 முறைக்கும் ஏற்றாற்போல வடிவமைப்பு செய்வதை அடிப்படையிலிருந்து எளிய தமிழில் கற்றுத்தரும் பயிற்சி வகுப்புகளாகும்.

நாட்கள், நேரம் -

1.        கேன்வா 1.1 - 08.03.2023, புதன் கிழமை, காலை 10.30 - 12.00, மதியம் 3.00 - 4.30 மற்றும் இரவு 7.30 - 9.00

2.        கேன்வா 1.2 - 09.03.2023, வியாழக்கிழமை, காலை 10.30 - 12.00, மதியம் 3.00 - 4.30 மற்றும் இரவு 7.30 - 9.00

3.        கேன்வா 1.1 - 10.03.2023, வெள்ளிக்கிழமை, காலை 10.30 - 12.00, மதியம் 3.00 - 4.30 மற்றும் இரவு 7.30 - 9.00

கட்டணம் -

கட்டணம் மூன்று நாட்களுக்கும் ரூ. 3900 மட்டுமே 3.3.2023ம் தேதிக்குள் செலுத்தினால் ரூ. 1900 மட்டுமே குறைவான நபர்கள் மட்டுமே அனுமதி. எனவே முதலில் வருவோர்க்கே முன்னுரிமை. கலந்து கொள்ள விரும்பு கவசம் டெலிகிராம் குழு உறுப்பினர்கள் குழு வழியாக மட்டும் நம்மைத் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் (ரூ. 2000 மதிப்புள்ள) +2 சிறப்பு போனஸ் உண்டு. இதுபற்றி முழு விவரம் நிகழ்ச்சியின் முதல் நாளன்று, நிகழ்ச்சியிலேயே அறிவிக்கப்படும்.

குறிப்பிட்ட தேதிக்குள் கட்டணம் செலுத்துபவர்கள் மட்டும் நமது அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

ஒருமுறை செலுத்தப்பட்டக் கட்டணத்தை ரத்து செய்வது, திருப்பி தருவது, வேறு வகையில் சரி செய்வது, வேறு நபருக்கு மாற்றிக் கொள்ளுவது உள்ளிட்ட எதுவும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. எனவே, தயவு செய்து முழு மனதுடன் கலந்து கொள்ள விரும்புபவர்கள் மட்டும் நிகழ்ச்சியில் இணைய வேண்டுகிறோம்.

டெலிகிராம் குழு -

இந்தப் பயிற்சி வகுப்பிற்கு என்று தனியான, பிரத்தியேகமான டெலிகிராம் குழு உருவாக்கப்படும். அதில் பயிற்சியளிப்போருடன், எங்களது ஆலோசகர்களும், நலம் விரும்பும் சிலரும், கட்டணம் கட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவரும் இணைக்கப்பட்டிருப்பார்கள். உங்கள் செல்பேசி மற்றும் கணினியில் கட்டாயம் டெலிகிராம் நிறுவிக் கொண்டிருக்க வேண்டும். வாட்ஸப் கிடையாது. அந்தக் குழு வழியே மட்டுமே நிகழ்ச்சி தொடர்பான எல்லா செய்திகளும் பகிரப்படும். இதனால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுபவர்களுக்கு மட்டும் நேரடியாக தகவல் கொடுக்க முடிகிறது. மேலும் பயிற்சியைத் தொடர்ந்து நீங்கள் உருவாக்கும் கோப்புகளை அப்படியே இந்தக் குழு வழியாக பகிர்ந்து, எங்களது பின்னூட்டத்தைப் பெறலாம். இந்தக் குழுவைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளுவது உங்கள் பொறுப்பாகும்.

அந்த டெலிகிராம் குழுவழியே மட்டுமே நிகழ்ச்சிக்கான ஜூம் ஐடி - பாஸ்வேர்ட் ஆகியன பகிரப்படும்.

நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் -

அனைவரது கவனத்திற்கும். (தயவு செய்து முழுமையாகப் படித்து புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.)

நமது பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம் நடத்தும் 2023ஆம் ஆண்டின் மூன்றாவது பயிற்சி வகுப்பும், ஜூம் செயலி வழியே நடத்தப்படும் 110வது நிகழ்ச்சியுமான கேன்வா - மூன்று நாள் அடிப்படைப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ள விரும்பும் அனைவருக்கும் எங்கள் இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு அடிப்படை, உங்களது உடனடியான முன்பதிவு மட்டுமேயாகும். மிக்க நன்றி.

நிகழ்ச்சியன்று சரியாக, குறிப்பிட்ட நேரங்களான காலை 10.30, மதியம் 3.00 மற்றும் இரவு 7.30 மணிக்கு 10 நிமிடம் முன்பாகவே ஜூம் செயலியில் இணைப்பு கொடுக்கப்பட்டுவிடும். மேலே குறிப்பிட்ட நேரங்களில் மிகச் சரியாக நிகழ்ச்சி (விளக்கவுரை) துவங்கிவிடும். எனவே அனைவரும் சரியான நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

நிகழ்ச்சியில் இணைந்தவுடன் அனைவரும் தங்களது பெயர், ஊர், செல்பேசி எண்களைப் பதிவு செய்வது கட்டாயமாகும். ஜூம் செயலியில் உங்கள் இணைப்பின் பெயரையும் கட்டாயம் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டுகிறோம்.

நிகழ்ச்சியில் உங்களது ஆடியோ இணைப்பு துண்டிக்கப்பட்டே இருக்கும். ஏதும் கேள்வி, ஐயம் இருந்தால் ஜூம் செயலியில் ஹேண்ட் ரைஸ் குறியை வெளியிட வேண்டும். (துவக்கத்தில் இதுபற்றிய விவரம் தரப்படும்.) விளக்கவுரையாளர் தனது உரையை நிறுத்தியதும் உங்களுக்கு ஒலி இணைப்பைக் கொடுக்கச் செய்வோம். நீங்கள் விளக்கம் கேட்டு பதில் பெறலாம். அல்லது ஜூம் செயலியின் சாட் பகுதியில் பதிவிட்டும் விளக்கம் பெறளாம்.

நிகழ்ச்சியின் ஒன்றரை மணி நேரமும் இடைவிடாமல் விளக்கவுரை நடத்தப்படும். அநேகமாக சரியான நேரத்தில் முடிந்துவிடும். எனினும் பங்குபெறுவோரின் கேள்விகளுக்கு விடை கொடுப்பதற்காக சற்று நேரம் எடுத்துக் கொள்ளப்படலாம். முடிவுநேரத்தை சரியாக வரையறுக்க இயலுவதில்லை.

தாமதமாக வருவது, தாமதமாக இணைந்துவிட்டு மீண்டும் துவக்க விளக்கங்களைக் கேட்பது, இணைப்பு சரியில்லை, ஒலி சரியில்லை, ஒலிபெருக்கி சரியில்லை - என்பன போன்ற காரணங்களும் செயல்பாடுகளும் ஏற்றுக் கொள்ள இயலாதவையாகும். தயவு செய்து முன்னதாக உங்கள் வன்பொருட்களையும், இணைய இணைப்பையும் சரியாக அமைத்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமையாகும்.

இந்த நிகழ்ச்சிக்காக நாங்கள் பயன்படுத்துவது ஜியோ பிராட் பேண்ட் - அன்லிமிடெட் டேடா இணைப்பு, Intel(R) Core(TM) i5-9400F CPU @ 2.90GHz   2.90 GHz P®¨³mhº, 16ஜிபி ரேம், 28" Monitor. இதற்கு ஏற்ற வன்பொருட்கள், மற்றும் தொடர்ந்து 30 மணிநேரம் இடைவிடாமல் செயல்படும், உரிமம் பெற்ற ஜூம் இணைப்பும் ஆகும்.

என்றாலும் எங்கள் தரப்பிலிருந்து நிகழ்ச்சியின் இடையே ஏதேனும் எதிர்பாராத தடை ஏற்பட்டால், சிறிது நேரம் காத்திருந்து மீண்டும் நிகழ்ச்சி துவங்கப்படும். எந்த வகையிலாவது நிகழ்ச்சியைத் தொடர்ந்து முழுமையாக நடத்தி முடிக்க வேண்டியது எங்கள் பொறுப்பாகும். தேவையென்றால் அடுத்து வரும் ஒரு நாளில் நிகழ்ச்சியின் தொடர்ச்சி நடத்தப்படலாம்.

இந்த நிகழ்ச்சிக்காக வேறு எந்தவொரு விளக்க ஏடுகள், காணொளிகள் பகிரப்படுவதற்கு இல்லை. நிகழ்ச்சியின் ஒளிப்பதிவு 3 மாதங்களுக்குப் பிறகு எங்களது யூட்யூப் சேனலில் பதிவிடப்படலாம். எனினும் இதற்கு எந்தவித உத்தரவாதமும் கிடையாது.

நிகழ்ச்சியில் ஒரு நபருக்கு ஒரு கருவிக்கு மட்டுமே இணைப்புத் தரப்படும். ஒன்றிற்கு மேற்பட்ட கருவிகள் இணைக்க அனுமதி இல்லை. உங்கள் கணினியின் வன்பொருட்களான ஸ்பீக்கர், மைக் போன்றவை சரியாக செயல்படும் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. தேவையெனில் அவற்றை சரிபார்க்க ஒருமுறை ஜூம் வழியாக இணைந்து சோதித்துப் பார்க்க நாங்கள் உதவலாம்*.

நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக எழும் ஐயங்களை டெலிகிராம் அல்லது வாட்ஸப் வழியாக எங்களைத் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். இதில் எந்தத் தடையும் இல்லை.

நிகழ்ச்சி தொடர்பான சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு திருச்சி நகர சட்ட எல்லைக்கு உட்பட்டது.

இதில் கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகள், கட்டுப்பாடுகளை எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி மாற்றுவதும், நீக்கவும், சேர்ப்பதும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்துபவர்களுக்கு உள்ள உரிமைகளாகும். இதில் எவரும் தலையிட முடியாது. தவிர்க்க முடியாத காரணங்களினால் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதும், ஒத்தி வைப்பதும், பகுதி நடத்தப்படாமல் நிறுத்தப்படுவதும் ஏற்பட்டால் அதற்கு ஒருங்கிணைப்பாளர்கள் பொறுப்பு இல்லை. இதனால் நிகழ்ச்சிக்கான கட்டணத்தை பகுதியாக அல்லது முழுமையாக திருப்பிக் கொடுப்பதும், வேறுவகையில் சரி செய்து கொள்ளுவதும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் இறுதி முடிவைச் சார்ந்ததாகும். இதில் எவரும் தலையிட முடியாது.

எனினும் நிகழ்ச்சியை எந்தவிதத் தடையும் இல்லாமல் முழுமையாக, சிறப்பாக, பங்குபெறுபவர்கள் அனைவரும் பலன்பெறும் வகையில் நடத்தி முடிக்க வேண்டும் என்பதே ஒருங்கிணைப்பாளர்களின் முதன்மையான நோக்கமாகும்.

குறிப்பு - கேன்வாவைப் பயின்று பயன்படுத்த விரும்புபவர்கள் மட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டுகிறோம். நேரம் போக்குவதற்காக, தகவல் அறிந்து கொள்ளுவதற்காக, வாகனம் ஓட்டிக் கொண்டே, செல்பேசி வழியாக ஒலியை மட்டும் கேட்பதற்காக, நடைபயிற்சின்போது, உணவருந்திக் கொண்டே நிகழ்ச்சியை செவிமடுப்பது, படுத்துக் கொண்டு பார்ப்பது - போன்ற செயல்களைச் செய்பவர்கள் தயவு செய்து நிகழ்ச்சியில் இணைய வேண்டாம். உண்மையான, அடிமனதிலிருந்து விருப்பத்துடன் வரும் இரண்டு நபர்கள் இணைந்தாலும் போதும். அதுவே எங்கள் நோக்கம். கூட்டம் சேர்க்க வேண்டும் என்று விரும்பவில்லை. நிகழ்ச்சிக்கும், நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கும் மரியாதை செய்யும் விதமாக நடந்து கொள்பவர்கள் மட்டும் நிகழ்ச்சியில் இணைய வேண்டுகிறோம். வருத்தப்பட வேண்டாம். இங்குள்ள நிபந்தனைகளையும், கட்டுப்பாடுகளையும் உருவாக்கி விளம்பரப்படுத்தும் எங்களது இந்தச் செயலுக்குக் காரணம், கடந்த காலங்களில் எங்களுக்குக் கிடைத்த சில கசப்பான அனுபவங்களே. யாரையும் காயப்படுத்தவோ, குத்திக் காட்டவோ அல்ல. நடந்தவை இனி நடக்கக்கூடாது என்பதே எங்கள் விருப்பம், நோக்கம் ஆகும்.

வாருங்கள், நிகழ்ச்சியில் சந்திக்கலாம். இது உங்களுக்கான நிகழ்ச்சி. நன்றி.

மேலும் விவரங்களுக்கு - எங்கள் வலைப்பூ காண்க. http://balajiicg.blogspot.com/

எங்களைத் தொடர்பு கொள்ளவும் - ஜெ.வீரநாதன், 99444-13782

திங்கள், 26 டிசம்பர், 2022

இணையம் - ஜூம் செயலி வழி இணையரங்கம்....
விவரங்கள்... முழு நிகழ்ச்சி நிரல் கீழே காண்க....

மீண்டெழுந்தோம், வரவேற்போம்.

2020-2021 ஆகிய இரண்டு ஆண்டுகள் எதிர்பாராத வகையில் மனித குலத்தை பலவகைகளில் கட்டுப்படுத்தி செயலிழக்க வைத்துவிட்டது.

எனினும் இந்த இரண்டு ஆண்டுகள் நமது அச்சுத்துறையில் பலரும் பலவகைகளில் செயல்பட்டுக் கொண்டுதான் இருந்தனர்.

அந்தவகையில் நமது பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம் வாயிலாக சுமார 90 நிகழ்ச்சிகளை இணையம் வழியாக நடத்தியுள்ளோம். இதில் 3 மணி நேர பயிற்சி வகுப்பு முதல் 3 மாத இந்தி மொழி பயிற்சி வகுப்பு வரை பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இதில் தமிழகத்தின் பல நகரங்களிலிருந்தும் பெருவாரியான அச்சக நண்பர்கள், கணினி வரைகலைஞர்கள், புகைப்படக் கலைஞரிகள் கலந்து கொண்டு பலன் பெற்றனர்.

செயல்படமுடியாக காலத்தில் பயிற்சியையும், இற்றைப்படுத்தியதையும் முறையாக செய்ததால், 2022ஆம் ஆண்டு தங்களுக்குப் பெரிதும் உதவியாக இருந்ததாக பல நண்பர்கள் மனம் திறந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

அவர்களுக்கெல்லாம் நமது உளமார்ந்த நன்றிகள் உரித்தாகுக.

2022ஆம் ஆண்டு நமக்கு நல்லதொரு ஆண்டாக நடந்து முடிந்திருக்கிறது.

எனினும் 2023ஆம் ஆண்டு பிறக்கும்போதே சற்று எச்சரிக்கையுடன் துவங்கவேண்டிய கட்டாயத்தை வலியுறுத்துகிறது. கடந்தகால பட்டறிவு நமக்கு எச்சிரிக்கை உணர்வையும், சமாளிக்கும் திறனையும் வளர்த்துக் கொடுத்திருக்கிறது என்றால் அது மிகையில்லை. எதிர்கொள்வோம்.

திறனுடன், முழுமையாக மீண்டெழுந்து வந்துள்ளோம். எனவே 2023ஐ உற்சாகமாகவும், புத்துணர்வுடனும் வரவேற்போம்.

இணையம் - ஜூம் செயலி வழியாக

01.01.2023, ஞாயிற்றுக்கிழமை

காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை

இடைவிடாத இணையரங்கம்!

இது ஒரு கட்டணம் இல்லா கருத்தரங்கு!!

எதிர்பாராதவிதமாக புத்தாண்டு என்பது புதிய விடுமுறை நாளுடன்

துவங்குகிறது. இது கூடுதல் விடுமுறை என்றில்லாமல், வழக்கமான ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாள் என்ற நிலையில் வருவதால் அந்த நாளை புதிய திட்டங்கள் ஏதும் இன்றி, புதிய சிந்தனைகளுடன், புதிய முறையில் வரவேற்கவும், நமக்கு பல வகைகளில் நல்லாதரவு கொடுத்துவரும் நமது அச்சுத்துறைக்காக ஏதேனும் புதிதாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தாலும் இந்தப் புதிய நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறோம்.

ஆம், உங்கள் ஒவ்வொருவரின் நல்லாதரவும், ஒத்துழைப்பும், பங்களிப்பும் கிடைக்கும் என்ற திடமான நம்பிக்கையுடன் இந்த நிகழ்ச்சியை திட்டமிட்டோம். செயல்படுத்துகிறோம்.

நோக்கம் -

அச்சுத்துறையில் உள்ளவர்களுக்குப் பயனளிக்கும் வகையில், புதிய ஆண்டு துவக்கத்தை பயன்படுத்த வேண்டும்.

திட்டங்கள் -

இந்த இணையரங்கத்தில் செயல்படுத்தவுள்ளவை பற்றிய சிறிய திட்டமிடலை இங்கு பகிர்ந்து கொள்கிறோம்.

1. துறை சார்ந்த வல்லுனர்கள், அறிஞர்கள், பெருமக்களை கலந்து கொள்ளச் செய்து அவர்களது ஆலோசனைகள், அறிவுரைகள், திட்டங்கள் போன்றவை எல்லோருக்கும் கிடைக்கும்படி செய்வது.

2.கணினி வரை கலைஞர்கள் உள்ளிட்ட அச்சுத்துறை ஊழியர்கள் அனைவருக்கும் ஏற்படும் ஐயங்களை நீக்குவது.

3.அச்சுத் துறைக்காக புதிதாக அறிமுகமாகியுள்ள மென்பொருட்கள், தொழில்நுட்பங்கள் உள்ளவற்றை முழுமையாக பகிர்ந்து கொள்வது.

4.அச்சின் எதிர்காலம், பெருகிவரும் வாய்ப்புகள் பற்றிய செய்திகளை பகிர்ந்து கொள்வது.

5.அச்சுத் துறையில் கிடைக்கும் கல்வி (படிப்புகள்) போன்றவை பற்றிய செய்திகளை கொடுப்பது.

6.நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அச்சுத்துறை, புத்தகப் பதிப்புத் துறை, பதாகை வடிவமைப்பு, புகைப்படத்துறை ஆகிய துறைகளில் உள்ளவர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஏற்பட்டுள்ள ஐயப்பாடுகள் தொடர்பான கேள்விகளுக்கு முடிந்தவரை பதில் கொடுப்பது. இதற்காக துறை சார்ந்த பட்டறிவு மிக்க அறிஞர் பெருமக்கள் தனித்துவமான உரைகளை கொடுக்கவும் கலந்துரையாடவும் கேள்விகளுக்கு பதில் சொல்லவும் கலந்துகொள்ள அழைப்பது.

7.துறைசார்ந்த நண்பர்களுக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்கள், பிரச்சனைகள் பற்றியும் அறிந்து கொள்வது. எதிர்காலத்தில் அவற்றிற்கு தீர்வுகளைக் கண்டறிந்து தெரிவிப்பது.

8.இன்னும் நடைமுறையில் தேவைப்படும் பகுதிகள் பற்றி சிந்திப்பது.

முடிவற்ற பெருவெளியைப் போல முடிவில்லாத சிறப்புத் தன்மைகளைக் கொண்ட அச்சுத்துறைக்காக நாம் சிந்தித்துள்ள சிறிய துளியே இது.

பங்கேற்பாளர்கள் -

சுருக்கமாகக் குறிப்பிடவேண்டுமென்றால், விருப்பம் உள்ள எவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்.

அச்சக உரிமையாளர்கள், அச்சுத்துறையில் பணியாற்றுபவர்கள், அச்சக மேற்பார்வையாளர்கள், அச்சக மேலாளர்கள், கணினி வரைகலைஞர்கள், வடிவமைப்பாளர்கள் அச்சு இயந்திரப் பொறியாளர்கள், அச்சு இயந்திரப் பணியாளர்கள், புத்தகக் கட்டுனர்கள், அனைத்துப் பகுதி உதவியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அச்சுத்துறை, விஸ்காம் மாணவர்கள், ஆசிரியப் பெருமக்கள், புகைப்பட வல்லுனர்கள், புகைப்படக் கலைஞர்கள், புதிய தொழில்முனைவோர்கள் - விருப்பம் உள்ள எவரும் கலந்து கொள்ளலாம்.

பங்கேற்பாளர்களுக்கு பரிசுகள் -

நமது அழைப்பை ஏற்று நிகழ்ச்சியில் பங்குபெறும் அனைவரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுபவர்களில் சிறப்பான நபர்களை, பல்வேறு வகைப்பிரிவுகளின் கீழ் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்க முடிவு செய்துள்ளோம்.

பிரிவுகளும் பரிசுகளும் சஸ்பென்ஸ். நிகழ்ச்சி அன்று இரவு 8.30 முதல் 8.50 வரை பரிசளிப்பு நடக்கும். அப்போது தெரிவிக்கப்படும்.

பரிசுகள் பொதுவாக நமது வெளியீடுகளான புத்தகங்களாகவே இருக்கும். எனினும் பரிசு பெறுவோரின் விருப்பப்படியான, அவர்களிடம் இல்லாத புத்தகத்தைத் தெரிவு செய்யும் உரிமையை அவர்களுக்கே கொடுக்கின்றோம். 1.1.23 அன்று இரவு 8.30க்கு இதுபற்றி மேலும் பேசலாம்.

விரிவுரையாளர்கள் -

அச்சுத்துறை பிதாமகர்கள், அச்சக சங்க நிர்வாகிகள், அச்சுக்கலை வல்லுனர்கள், ஆசிரியர்கள், பட்டறிவுமிக்க வரைகலைஞர்கள், புகைப்பட வல்லுநர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விரிவுரையும் விளக்கவுரையும் தருவதற்கு இசைந்துள்ளார்கள்.

நிகழ்ச்சி நிரல் மற்றும் முழு விவரம் விரைவில் வெளியிடுகிறோம்.

கட்டணம் -

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எந்த வகையிலும் எந்தவொரு கட்டணமும் கிடையாது.

நன்கொடையாளர்கள் -

எனினும் நண்பர்களின் அறிவுரை மற்றும் ஆலோசனையின் பேரில் நன்கொடையாக பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளோம். இதுவும் விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டும்தான். எந்தவிதக் நிபந்தனையும், கட்டுப்பாடும் கிடையாது.

எங்களது ஜிபே எண் - 98422 13782

நிகழ்ச்சிக்கு விளம்பரதாரர்களையும் வரவேற்கிறோம். இதுபற்றிய விவரங்களுக்கு 99444-13782 என்ற எண்ணில் எங்களைத் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

ஜூம் ஐடி - பாஸ்கோட் -

இந்த நிகழ்ச்சிக்கான ஜூம் ஐடி மற்றும் பாஸ்கோட் ஆகியவற்றை கீழே காண்க. நிகழ்ச்சியில் நேரடியாக இணையலாம். எனினும் இந்த நிகழ்ச்சியில் அதிகபட்சமாக 100 நபர்கள் மட்டுமே இணைய முடியும் என்பதால், முதலில் வருவோருக்கே முன்னுரிமை. தயவு செய்து விருப்பம் உள்ளவர்கள் தாமதம் இல்லாமல் இணைந்து கொள்ளவும்.

Zoom ID : 819 3580 6097 Passcode : 112023

விதிகள் மற்றும் நிபந்தனைகள் -

நிகழ்ச்சியில் இணைந்தவுடன், ஜூம் செயலியில் உள்ள Chat பகுதியில் உங்கள் பெயர், நிறுவனம், ஊர், தொலைபேசி எண் ஆகியவற்றைப் பதிவு செய்து வையுங்கள்.

நிகழ்ச்சியின் இறுதியில் நடத்தப்படுவதாக உள்ள பரிசுத் தேர்வில் இவை பயன்படுத்தப்படலாம்.

நிகழ்ச்சியில் இணையும் போது உங்களது ஆடியோ துண்டிக்கப்பட்டே இருக்கும். கேள்விகள் கேட்க வேண்டும் என்றால், ஜூம் செயலியில் உள்ள Hand rise குறியை வெளியிட வேண்டும், அல்லது Chat பகுதியில் உங்களது கேள்வியை வெளியிடலாம்.

விரிவுரையாளர் பேசி முடித்தபிறகு, உங்களது ஆடியோ செயல்படுத்தப் படலாம். நெறியாளர் அப்போது உங்கள் பெயரைச் சொல்லி அழைப்பார். உடன் நீங்கள் கேள்விகள் கேட்கலாம்.

நிகழ்ச்சியில் உங்களது விளக்கவுரை இடம்பெற வேண்டும் என்றால், 30.12.2022ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்குள் எங்களைத் தொலைபேசி வழியே பேசி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

நிகழ்ச்சி நிரல் -

மேலும் விவரங்களுக்கும் உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம். நன்றி.