திங்கள், 26 டிசம்பர், 2022

 

இணையம் - ஜூம் செயலி வழி இணையரங்கம்....
விவரங்கள்... முழு நிகழ்ச்சி நிரல் கீழே காண்க....

மீண்டெழுந்தோம், வரவேற்போம்.

2020-2021 ஆகிய இரண்டு ஆண்டுகள் எதிர்பாராத வகையில் மனித குலத்தை பலவகைகளில் கட்டுப்படுத்தி செயலிழக்க வைத்துவிட்டது.

எனினும் இந்த இரண்டு ஆண்டுகள் நமது அச்சுத்துறையில் பலரும் பலவகைகளில் செயல்பட்டுக் கொண்டுதான் இருந்தனர்.

அந்தவகையில் நமது பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம் வாயிலாக சுமார 90 நிகழ்ச்சிகளை இணையம் வழியாக நடத்தியுள்ளோம். இதில் 3 மணி நேர பயிற்சி வகுப்பு முதல் 3 மாத இந்தி மொழி பயிற்சி வகுப்பு வரை பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இதில் தமிழகத்தின் பல நகரங்களிலிருந்தும் பெருவாரியான அச்சக நண்பர்கள், கணினி வரைகலைஞர்கள், புகைப்படக் கலைஞரிகள் கலந்து கொண்டு பலன் பெற்றனர்.

செயல்படமுடியாக காலத்தில் பயிற்சியையும், இற்றைப்படுத்தியதையும் முறையாக செய்ததால், 2022ஆம் ஆண்டு தங்களுக்குப் பெரிதும் உதவியாக இருந்ததாக பல நண்பர்கள் மனம் திறந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

அவர்களுக்கெல்லாம் நமது உளமார்ந்த நன்றிகள் உரித்தாகுக.

2022ஆம் ஆண்டு நமக்கு நல்லதொரு ஆண்டாக நடந்து முடிந்திருக்கிறது.

எனினும் 2023ஆம் ஆண்டு பிறக்கும்போதே சற்று எச்சரிக்கையுடன் துவங்கவேண்டிய கட்டாயத்தை வலியுறுத்துகிறது. கடந்தகால பட்டறிவு நமக்கு எச்சிரிக்கை உணர்வையும், சமாளிக்கும் திறனையும் வளர்த்துக் கொடுத்திருக்கிறது என்றால் அது மிகையில்லை. எதிர்கொள்வோம்.

திறனுடன், முழுமையாக மீண்டெழுந்து வந்துள்ளோம். எனவே 2023ஐ உற்சாகமாகவும், புத்துணர்வுடனும் வரவேற்போம்.

இணையம் - ஜூம் செயலி வழியாக

01.01.2023, ஞாயிற்றுக்கிழமை

காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை

இடைவிடாத இணையரங்கம்!

இது ஒரு கட்டணம் இல்லா கருத்தரங்கு!!

எதிர்பாராதவிதமாக புத்தாண்டு என்பது புதிய விடுமுறை நாளுடன்


துவங்குகிறது. இது கூடுதல் விடுமுறை என்றில்லாமல், வழக்கமான ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாள் என்ற நிலையில் வருவதால் அந்த நாளை புதிய திட்டங்கள் ஏதும் இன்றி, புதிய சிந்தனைகளுடன், புதிய முறையில் வரவேற்கவும், நமக்கு பல வகைகளில் நல்லாதரவு கொடுத்துவரும் நமது அச்சுத்துறைக்காக ஏதேனும் புதிதாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தாலும் இந்தப் புதிய நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறோம்.

ஆம், உங்கள் ஒவ்வொருவரின் நல்லாதரவும், ஒத்துழைப்பும், பங்களிப்பும் கிடைக்கும் என்ற திடமான நம்பிக்கையுடன் இந்த நிகழ்ச்சியை திட்டமிட்டோம். செயல்படுத்துகிறோம்.

நோக்கம் -

அச்சுத்துறையில் உள்ளவர்களுக்குப் பயனளிக்கும் வகையில், புதிய ஆண்டு துவக்கத்தை பயன்படுத்த வேண்டும்.

திட்டங்கள் -

இந்த இணையரங்கத்தில் செயல்படுத்தவுள்ளவை பற்றிய சிறிய திட்டமிடலை இங்கு பகிர்ந்து கொள்கிறோம்.

1. துறை சார்ந்த வல்லுனர்கள், அறிஞர்கள், பெருமக்களை கலந்து கொள்ளச் செய்து அவர்களது ஆலோசனைகள், அறிவுரைகள், திட்டங்கள் போன்றவை எல்லோருக்கும் கிடைக்கும்படி செய்வது.

2.கணினி வரை கலைஞர்கள் உள்ளிட்ட அச்சுத்துறை ஊழியர்கள் அனைவருக்கும் ஏற்படும் ஐயங்களை நீக்குவது.

3.அச்சுத் துறைக்காக புதிதாக அறிமுகமாகியுள்ள மென்பொருட்கள், தொழில்நுட்பங்கள் உள்ளவற்றை முழுமையாக பகிர்ந்து கொள்வது.

4.அச்சின் எதிர்காலம், பெருகிவரும் வாய்ப்புகள் பற்றிய செய்திகளை பகிர்ந்து கொள்வது.

5.அச்சுத் துறையில் கிடைக்கும் கல்வி (படிப்புகள்) போன்றவை பற்றிய செய்திகளை கொடுப்பது.

6.நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அச்சுத்துறை, புத்தகப் பதிப்புத் துறை, பதாகை வடிவமைப்பு, புகைப்படத்துறை ஆகிய துறைகளில் உள்ளவர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஏற்பட்டுள்ள ஐயப்பாடுகள் தொடர்பான கேள்விகளுக்கு முடிந்தவரை பதில் கொடுப்பது. இதற்காக துறை சார்ந்த பட்டறிவு மிக்க அறிஞர் பெருமக்கள் தனித்துவமான உரைகளை கொடுக்கவும் கலந்துரையாடவும் கேள்விகளுக்கு பதில் சொல்லவும் கலந்துகொள்ள அழைப்பது.

7.துறைசார்ந்த நண்பர்களுக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்கள், பிரச்சனைகள் பற்றியும் அறிந்து கொள்வது. எதிர்காலத்தில் அவற்றிற்கு தீர்வுகளைக் கண்டறிந்து தெரிவிப்பது.

8.இன்னும் நடைமுறையில் தேவைப்படும் பகுதிகள் பற்றி சிந்திப்பது.

முடிவற்ற பெருவெளியைப் போல முடிவில்லாத சிறப்புத் தன்மைகளைக் கொண்ட அச்சுத்துறைக்காக நாம் சிந்தித்துள்ள சிறிய துளியே இது.

பங்கேற்பாளர்கள் -

சுருக்கமாகக் குறிப்பிடவேண்டுமென்றால், விருப்பம் உள்ள எவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்.

அச்சக உரிமையாளர்கள், அச்சுத்துறையில் பணியாற்றுபவர்கள், அச்சக மேற்பார்வையாளர்கள், அச்சக மேலாளர்கள், கணினி வரைகலைஞர்கள், வடிவமைப்பாளர்கள் அச்சு இயந்திரப் பொறியாளர்கள், அச்சு இயந்திரப் பணியாளர்கள், புத்தகக் கட்டுனர்கள், அனைத்துப் பகுதி உதவியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அச்சுத்துறை, விஸ்காம் மாணவர்கள், ஆசிரியப் பெருமக்கள், புகைப்பட வல்லுனர்கள், புகைப்படக் கலைஞர்கள், புதிய தொழில்முனைவோர்கள் - விருப்பம் உள்ள எவரும் கலந்து கொள்ளலாம்.

பங்கேற்பாளர்களுக்கு பரிசுகள் -

நமது அழைப்பை ஏற்று நிகழ்ச்சியில் பங்குபெறும் அனைவரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுபவர்களில் சிறப்பான நபர்களை, பல்வேறு வகைப்பிரிவுகளின் கீழ் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்க முடிவு செய்துள்ளோம்.

பிரிவுகளும் பரிசுகளும் சஸ்பென்ஸ். நிகழ்ச்சி அன்று இரவு 8.30 முதல் 8.50 வரை பரிசளிப்பு நடக்கும். அப்போது தெரிவிக்கப்படும்.

பரிசுகள் பொதுவாக நமது வெளியீடுகளான புத்தகங்களாகவே இருக்கும். எனினும் பரிசு பெறுவோரின் விருப்பப்படியான, அவர்களிடம் இல்லாத புத்தகத்தைத் தெரிவு செய்யும் உரிமையை அவர்களுக்கே கொடுக்கின்றோம். 1.1.23 அன்று இரவு 8.30க்கு இதுபற்றி மேலும் பேசலாம்.

விரிவுரையாளர்கள் -

அச்சுத்துறை பிதாமகர்கள், அச்சக சங்க நிர்வாகிகள், அச்சுக்கலை வல்லுனர்கள், ஆசிரியர்கள், பட்டறிவுமிக்க வரைகலைஞர்கள், புகைப்பட வல்லுநர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விரிவுரையும் விளக்கவுரையும் தருவதற்கு இசைந்துள்ளார்கள்.

நிகழ்ச்சி நிரல் மற்றும் முழு விவரம் விரைவில் வெளியிடுகிறோம்.

கட்டணம் -

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எந்த வகையிலும் எந்தவொரு கட்டணமும் கிடையாது.

நன்கொடையாளர்கள் -

எனினும் நண்பர்களின் அறிவுரை மற்றும் ஆலோசனையின் பேரில் நன்கொடையாக பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளோம். இதுவும் விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டும்தான். எந்தவிதக் நிபந்தனையும், கட்டுப்பாடும் கிடையாது.

எங்களது ஜிபே எண் - 98422 13782

நிகழ்ச்சிக்கு விளம்பரதாரர்களையும் வரவேற்கிறோம். இதுபற்றிய விவரங்களுக்கு 99444-13782 என்ற எண்ணில் எங்களைத் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

ஜூம் ஐடி - பாஸ்கோட் -

இந்த நிகழ்ச்சிக்கான ஜூம் ஐடி மற்றும் பாஸ்கோட் ஆகியவற்றை கீழே காண்க. நிகழ்ச்சியில் நேரடியாக இணையலாம். எனினும் இந்த நிகழ்ச்சியில் அதிகபட்சமாக 100 நபர்கள் மட்டுமே இணைய முடியும் என்பதால், முதலில் வருவோருக்கே முன்னுரிமை. தயவு செய்து விருப்பம் உள்ளவர்கள் தாமதம் இல்லாமல் இணைந்து கொள்ளவும்.

Zoom ID : 819 3580 6097 Passcode : 112023

விதிகள் மற்றும் நிபந்தனைகள் -

நிகழ்ச்சியில் இணைந்தவுடன், ஜூம் செயலியில் உள்ள Chat பகுதியில் உங்கள் பெயர், நிறுவனம், ஊர், தொலைபேசி எண் ஆகியவற்றைப் பதிவு செய்து வையுங்கள்.

நிகழ்ச்சியின் இறுதியில் நடத்தப்படுவதாக உள்ள பரிசுத் தேர்வில் இவை பயன்படுத்தப்படலாம்.

நிகழ்ச்சியில் இணையும் போது உங்களது ஆடியோ துண்டிக்கப்பட்டே இருக்கும். கேள்விகள் கேட்க வேண்டும் என்றால், ஜூம் செயலியில் உள்ள Hand rise குறியை வெளியிட வேண்டும், அல்லது Chat பகுதியில் உங்களது கேள்வியை வெளியிடலாம்.

விரிவுரையாளர் பேசி முடித்தபிறகு, உங்களது ஆடியோ செயல்படுத்தப் படலாம். நெறியாளர் அப்போது உங்கள் பெயரைச் சொல்லி அழைப்பார். உடன் நீங்கள் கேள்விகள் கேட்கலாம்.

நிகழ்ச்சியில் உங்களது விளக்கவுரை இடம்பெற வேண்டும் என்றால், 30.12.2022ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்குள் எங்களைத் தொலைபேசி வழியே பேசி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

நிகழ்ச்சி நிரல் -

மேலும் விவரங்களுக்கும் உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம். நன்றி.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக