வியாழன், 23 பிப்ரவரி, 2023

கேன்வா - பயிற்சி வகுப்பு

 கேன்வா - பயிற்சி வகுப்பு!

நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்துபவர்கள் -

பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம். தற்போது திருச்சி நகரிலிருந்து இணையம் வழியாக இந்தப் பயிற்சி வகுப்பையும், கணினி வரைகலைக்கான மென்பொருட்களுக்கான பயிற்சி வகுப்புகளையும் தொடர்ந்து நடத்தி வருகின்றார்கள். அறிந்ததைப் பகிர்ந்து கொள்வோம் - என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் நாங்கள், தற்போது பேஜ்மேக்கர், இன்டிசைன், இல்லஸ்ட்ரேட்டர், போட்டோஷாப், பிரீமியர், கோரல்டிரா, போன்ற தொழில்முறை மென்பொருட்களுக்கும், இங்க்ஸ்கேப், ஜிம்ப், ஸின்பிங் ஸ்டூடியோ போன்ற கட்டற்ற மென்பொருட்களுக்கும், கணினியின் அடிப்படை நிலையில் பயன்படுத்தப்படும் எம்.எஸ்.ஆபீஸ் மென்பொருளின், வேர்ட், எக்ஸெல், பவர்பாயின்ட், ஆக்சஸ் ஆகியவற்றிற்கும் பயிற்சி வகுப்புகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

தற்போது கேன்வா எனும் இணையம் வழியாகக் கிடைக்கும் செயலி மென்பொருளுக்கும் இணையம் வழிப் பயிற்சி வகுப்புகளைத் துவங்கி நடத்தி வருகிறோம்.

பயிற்சியின் நோக்கம் -

மாறிவரும் தொழில்நுட்பத்தை அனைத்து நிலைகளிலும் உள்ள கணினி வரைகலைஞர்களும் தங்களது வேலை நேரத்தில், அலுவலகத்திலிருந்த நேரடியாக கலந்து கொண்டு பலன்பெற வேண்டும் என்பதே அடிப்படை நோக்கமாகும்.

பயிற்சியின் சிறப்பு அம்சங்கள் -

கணினி வரைகலைக்கு முற்றிலும் புதியவர்களும், முன்பே வரைகலையில் பட்டறிவு மிக்கவர்களும் கலந்து கொள்ளலாம். கேன்வாவின் அடிப்படையிலிருந்து சொல்லிக் கொடுக்கப்படும்.

நிகழ்ச்சிக்குப் பிறகு, எந்த நிலையிலும் உங்களுக்கு ஏற்படும் ஐயங்களை டெலிகிராம் செயலி வழியாகக் கேள்வியாகக் கேட்டு முழுமையான விளக்கம் பெறலாம்.

பயிற்சி அளிப்பவர்கள் -

1. திரு. ஜெ.வீரநாதன் - 33 ஆண்டுகளாக கணினி வரைகலையை பயன்படுத்தி வருவதுடன், தொடர்ந்து பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறார். கோவிட் ஊரடங்கின் காரணமாக நமக்குக் கிடைத்த புதிய வசதியான இணையம் வழியில் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார். 9 தொழில்முறை மென்பொருட்களுக்கு முழுமையான புத்தகங்களை தமிழ் மொழியில் எழுதி வெளியிட்டுள்ளார். அந்த வகையில் சிறந்த தமிழ் கணினி நூல் என்ற முதல் பரிசை தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையிடமிருந்து இரண்டு முறை பெற்றிருக்கின்றார். பல நூறு கணினி வரைகலைஞர்களை உருவாக்கியுள்ளார்.

2. திரு. கே.விஜயானந்தன் - 25 ஆண்டுகளுக்கும் மேலாக கணினி வரைகலையை பயன்படுத்தி வருகிறார். வளைகுடா நாடுகளில் பணியாற்றிய பட்டறிவு மிக்கவர். சிறந்த வரைகலைஞர். நேர்த்தியான வடிவமைப்புக்குச் சொந்தக்காரர். பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு வடிவமைப்புகளைச் செய்து கொடுத்து வருபவர். இணையம் வழிப் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருபவர்.

பயிற்சி வகுப்புகள் -

கேன்வா 1.1 - இந்த வகுப்பில் கேன்வா செயலியின் துவக்கம், அடிப்படை, அச்சுத்துறைக்கு ஏற்றாற்போல வடிவமைக்கும் வழிமுறைகள், அடிப்படை அளவுகள், வண்ணம் பிரித்தல் உட்பட தேவையான அடிப்படை விளக்கங்கள் தரப்படும்.

கேன்வா 1.2 - இந்த வகுப்பில் கேன்வா செயலியை பயன்படுத்தி சமூக ஊடகங்களான முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட பகுதிகளுக்கு வடிவமைப்பு செய்யும் வழிமுறைகளும், அனிமேஷன் மற்றும் வீடியோ முறைகளும் செயல்முறையாக விளக்கப்படும்.

கேன்வா 1.3 - இந்த வகுப்பில் கேன்வா செயலியை பயன்படுத்தி வலைதளப்பக்கம் வடிவமைத்து உங்களுக்கும், வாடிக்கையாளர்களுக்குமான வலைதளங்களை உருவாக்கிக் கொடுக்கும் வழிமுறைகள் அடிப்படையிலிருந்து விளக்கிச் சொல்லப்படும்.

இந்த மூன்று வகுப்புகளும், மூன்று நாட்களில், தினசரி 3 முறை நடத்தப்படும். ஆம், முதல் நாள் காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று நேரங்களிலும் கேன்வா 1.1 வகுப்பும், தொடர்ந்து இரண்டு நாட்களிலும் இதேபோல கேன்வா 1.2, கேனாவ் 1.3 ஆகிய இரண்டு வகுப்புகளும் நடத்தப்படும்.

இதனால் ஒரு முறை கட்டணம் செலுத்தியவர்கள் மூன்று வகுப்புகளில் எதில் வேண்டுமானாலும், உங்களுக்கு வசதிப்பட்ட நேரத்தில் கலந்து கொள்ளலாம். அல்லது மூன்று வகுப்புகளிலும் கலந்து கொள்ளலாம். எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லை. அதாவது, ஒரே ஒரு கட்டணத்தில் மூன்று முறை, 9 வகுப்புகள் மூலமாக (3x3=9) விளக்கங்களைக் கேட்டு முழுமையாகப் பயிற்சி பெறுவதற்கு, அரிய வாய்ப்பு!

பாடத்திட்டம் -

அச்சு ஊடகம், சமூக ஊடகம், வலைதள பக்கம் வடிவமைப்பு - என்று மாறிவரும் தற்போதைய சூழலில் பயன்பாட்டில் உள்ள 3 முறைக்கும் ஏற்றாற்போல வடிவமைப்பு செய்வதை அடிப்படையிலிருந்து எளிய தமிழில் கற்றுத்தரும் பயிற்சி வகுப்புகளாகும்.

நாட்கள், நேரம் -

1.        கேன்வா 1.1 - 08.03.2023, புதன் கிழமை, காலை 10.30 - 12.00, மதியம் 3.00 - 4.30 மற்றும் இரவு 7.30 - 9.00

2.        கேன்வா 1.2 - 09.03.2023, வியாழக்கிழமை, காலை 10.30 - 12.00, மதியம் 3.00 - 4.30 மற்றும் இரவு 7.30 - 9.00

3.        கேன்வா 1.1 - 10.03.2023, வெள்ளிக்கிழமை, காலை 10.30 - 12.00, மதியம் 3.00 - 4.30 மற்றும் இரவு 7.30 - 9.00

கட்டணம் -

கட்டணம் மூன்று நாட்களுக்கும் ரூ. 3900 மட்டுமே 3.3.2023ம் தேதிக்குள் செலுத்தினால் ரூ. 1900 மட்டுமே குறைவான நபர்கள் மட்டுமே அனுமதி. எனவே முதலில் வருவோர்க்கே முன்னுரிமை. கலந்து கொள்ள விரும்பு கவசம் டெலிகிராம் குழு உறுப்பினர்கள் குழு வழியாக மட்டும் நம்மைத் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் (ரூ. 2000 மதிப்புள்ள) +2 சிறப்பு போனஸ் உண்டு. இதுபற்றி முழு விவரம் நிகழ்ச்சியின் முதல் நாளன்று, நிகழ்ச்சியிலேயே அறிவிக்கப்படும்.

குறிப்பிட்ட தேதிக்குள் கட்டணம் செலுத்துபவர்கள் மட்டும் நமது அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

ஒருமுறை செலுத்தப்பட்டக் கட்டணத்தை ரத்து செய்வது, திருப்பி தருவது, வேறு வகையில் சரி செய்வது, வேறு நபருக்கு மாற்றிக் கொள்ளுவது உள்ளிட்ட எதுவும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. எனவே, தயவு செய்து முழு மனதுடன் கலந்து கொள்ள விரும்புபவர்கள் மட்டும் நிகழ்ச்சியில் இணைய வேண்டுகிறோம்.



டெலிகிராம் குழு -

இந்தப் பயிற்சி வகுப்பிற்கு என்று தனியான, பிரத்தியேகமான டெலிகிராம் குழு உருவாக்கப்படும். அதில் பயிற்சியளிப்போருடன், எங்களது ஆலோசகர்களும், நலம் விரும்பும் சிலரும், கட்டணம் கட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவரும் இணைக்கப்பட்டிருப்பார்கள். உங்கள் செல்பேசி மற்றும் கணினியில் கட்டாயம் டெலிகிராம் நிறுவிக் கொண்டிருக்க வேண்டும். வாட்ஸப் கிடையாது. அந்தக் குழு வழியே மட்டுமே நிகழ்ச்சி தொடர்பான எல்லா செய்திகளும் பகிரப்படும். இதனால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுபவர்களுக்கு மட்டும் நேரடியாக தகவல் கொடுக்க முடிகிறது. மேலும் பயிற்சியைத் தொடர்ந்து நீங்கள் உருவாக்கும் கோப்புகளை அப்படியே இந்தக் குழு வழியாக பகிர்ந்து, எங்களது பின்னூட்டத்தைப் பெறலாம். இந்தக் குழுவைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளுவது உங்கள் பொறுப்பாகும்.

அந்த டெலிகிராம் குழுவழியே மட்டுமே நிகழ்ச்சிக்கான ஜூம் ஐடி - பாஸ்வேர்ட் ஆகியன பகிரப்படும்.

நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் -

அனைவரது கவனத்திற்கும். (தயவு செய்து முழுமையாகப் படித்து புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.)

நமது பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம் நடத்தும் 2023ஆம் ஆண்டின் மூன்றாவது பயிற்சி வகுப்பும், ஜூம் செயலி வழியே நடத்தப்படும் 110வது நிகழ்ச்சியுமான கேன்வா - மூன்று நாள் அடிப்படைப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ள விரும்பும் அனைவருக்கும் எங்கள் இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு அடிப்படை, உங்களது உடனடியான முன்பதிவு மட்டுமேயாகும். மிக்க நன்றி.

நிகழ்ச்சியன்று சரியாக, குறிப்பிட்ட நேரங்களான காலை 10.30, மதியம் 3.00 மற்றும் இரவு 7.30 மணிக்கு 10 நிமிடம் முன்பாகவே ஜூம் செயலியில் இணைப்பு கொடுக்கப்பட்டுவிடும். மேலே குறிப்பிட்ட நேரங்களில் மிகச் சரியாக நிகழ்ச்சி (விளக்கவுரை) துவங்கிவிடும். எனவே அனைவரும் சரியான நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

நிகழ்ச்சியில் இணைந்தவுடன் அனைவரும் தங்களது பெயர், ஊர், செல்பேசி எண்களைப் பதிவு செய்வது கட்டாயமாகும். ஜூம் செயலியில் உங்கள் இணைப்பின் பெயரையும் கட்டாயம் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டுகிறோம்.

நிகழ்ச்சியில் உங்களது ஆடியோ இணைப்பு துண்டிக்கப்பட்டே இருக்கும். ஏதும் கேள்வி, ஐயம் இருந்தால் ஜூம் செயலியில் ஹேண்ட் ரைஸ் குறியை வெளியிட வேண்டும். (துவக்கத்தில் இதுபற்றிய விவரம் தரப்படும்.) விளக்கவுரையாளர் தனது உரையை நிறுத்தியதும் உங்களுக்கு ஒலி இணைப்பைக் கொடுக்கச் செய்வோம். நீங்கள் விளக்கம் கேட்டு பதில் பெறலாம். அல்லது ஜூம் செயலியின் சாட் பகுதியில் பதிவிட்டும் விளக்கம் பெறளாம்.

நிகழ்ச்சியின் ஒன்றரை மணி நேரமும் இடைவிடாமல் விளக்கவுரை நடத்தப்படும். அநேகமாக சரியான நேரத்தில் முடிந்துவிடும். எனினும் பங்குபெறுவோரின் கேள்விகளுக்கு விடை கொடுப்பதற்காக சற்று நேரம் எடுத்துக் கொள்ளப்படலாம். முடிவுநேரத்தை சரியாக வரையறுக்க இயலுவதில்லை.

தாமதமாக வருவது, தாமதமாக இணைந்துவிட்டு மீண்டும் துவக்க விளக்கங்களைக் கேட்பது, இணைப்பு சரியில்லை, ஒலி சரியில்லை, ஒலிபெருக்கி சரியில்லை - என்பன போன்ற காரணங்களும் செயல்பாடுகளும் ஏற்றுக் கொள்ள இயலாதவையாகும். தயவு செய்து முன்னதாக உங்கள் வன்பொருட்களையும், இணைய இணைப்பையும் சரியாக அமைத்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமையாகும்.

இந்த நிகழ்ச்சிக்காக நாங்கள் பயன்படுத்துவது ஜியோ பிராட் பேண்ட் - அன்லிமிடெட் டேடா இணைப்பு, Intel(R) Core(TM) i5-9400F CPU @ 2.90GHz   2.90 GHz P®¨³mhº, 16ஜிபி ரேம், 28" Monitor. இதற்கு ஏற்ற வன்பொருட்கள், மற்றும் தொடர்ந்து 30 மணிநேரம் இடைவிடாமல் செயல்படும், உரிமம் பெற்ற ஜூம் இணைப்பும் ஆகும்.

என்றாலும் எங்கள் தரப்பிலிருந்து நிகழ்ச்சியின் இடையே ஏதேனும் எதிர்பாராத தடை ஏற்பட்டால், சிறிது நேரம் காத்திருந்து மீண்டும் நிகழ்ச்சி துவங்கப்படும். எந்த வகையிலாவது நிகழ்ச்சியைத் தொடர்ந்து முழுமையாக நடத்தி முடிக்க வேண்டியது எங்கள் பொறுப்பாகும். தேவையென்றால் அடுத்து வரும் ஒரு நாளில் நிகழ்ச்சியின் தொடர்ச்சி நடத்தப்படலாம்.

இந்த நிகழ்ச்சிக்காக வேறு எந்தவொரு விளக்க ஏடுகள், காணொளிகள் பகிரப்படுவதற்கு இல்லை. நிகழ்ச்சியின் ஒளிப்பதிவு 3 மாதங்களுக்குப் பிறகு எங்களது யூட்யூப் சேனலில் பதிவிடப்படலாம். எனினும் இதற்கு எந்தவித உத்தரவாதமும் கிடையாது.

நிகழ்ச்சியில் ஒரு நபருக்கு ஒரு கருவிக்கு மட்டுமே இணைப்புத் தரப்படும். ஒன்றிற்கு மேற்பட்ட கருவிகள் இணைக்க அனுமதி இல்லை. உங்கள் கணினியின் வன்பொருட்களான ஸ்பீக்கர், மைக் போன்றவை சரியாக செயல்படும் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. தேவையெனில் அவற்றை சரிபார்க்க ஒருமுறை ஜூம் வழியாக இணைந்து சோதித்துப் பார்க்க நாங்கள் உதவலாம்*.

நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக எழும் ஐயங்களை டெலிகிராம் அல்லது வாட்ஸப் வழியாக எங்களைத் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். இதில் எந்தத் தடையும் இல்லை.

நிகழ்ச்சி தொடர்பான சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு திருச்சி நகர சட்ட எல்லைக்கு உட்பட்டது.

இதில் கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகள், கட்டுப்பாடுகளை எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி மாற்றுவதும், நீக்கவும், சேர்ப்பதும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்துபவர்களுக்கு உள்ள உரிமைகளாகும். இதில் எவரும் தலையிட முடியாது. தவிர்க்க முடியாத காரணங்களினால் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதும், ஒத்தி வைப்பதும், பகுதி நடத்தப்படாமல் நிறுத்தப்படுவதும் ஏற்பட்டால் அதற்கு ஒருங்கிணைப்பாளர்கள் பொறுப்பு இல்லை. இதனால் நிகழ்ச்சிக்கான கட்டணத்தை பகுதியாக அல்லது முழுமையாக திருப்பிக் கொடுப்பதும், வேறுவகையில் சரி செய்து கொள்ளுவதும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் இறுதி முடிவைச் சார்ந்ததாகும். இதில் எவரும் தலையிட முடியாது.

எனினும் நிகழ்ச்சியை எந்தவிதத் தடையும் இல்லாமல் முழுமையாக, சிறப்பாக, பங்குபெறுபவர்கள் அனைவரும் பலன்பெறும் வகையில் நடத்தி முடிக்க வேண்டும் என்பதே ஒருங்கிணைப்பாளர்களின் முதன்மையான நோக்கமாகும்.

குறிப்பு - கேன்வாவைப் பயின்று பயன்படுத்த விரும்புபவர்கள் மட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டுகிறோம். நேரம் போக்குவதற்காக, தகவல் அறிந்து கொள்ளுவதற்காக, வாகனம் ஓட்டிக் கொண்டே, செல்பேசி வழியாக ஒலியை மட்டும் கேட்பதற்காக, நடைபயிற்சின்போது, உணவருந்திக் கொண்டே நிகழ்ச்சியை செவிமடுப்பது, படுத்துக் கொண்டு பார்ப்பது - போன்ற செயல்களைச் செய்பவர்கள் தயவு செய்து நிகழ்ச்சியில் இணைய வேண்டாம். உண்மையான, அடிமனதிலிருந்து விருப்பத்துடன் வரும் இரண்டு நபர்கள் இணைந்தாலும் போதும். அதுவே எங்கள் நோக்கம். கூட்டம் சேர்க்க வேண்டும் என்று விரும்பவில்லை. நிகழ்ச்சிக்கும், நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கும் மரியாதை செய்யும் விதமாக நடந்து கொள்பவர்கள் மட்டும் நிகழ்ச்சியில் இணைய வேண்டுகிறோம். வருத்தப்பட வேண்டாம். இங்குள்ள நிபந்தனைகளையும், கட்டுப்பாடுகளையும் உருவாக்கி விளம்பரப்படுத்தும் எங்களது இந்தச் செயலுக்குக் காரணம், கடந்த காலங்களில் எங்களுக்குக் கிடைத்த சில கசப்பான அனுபவங்களே. யாரையும் காயப்படுத்தவோ, குத்திக் காட்டவோ அல்ல. நடந்தவை இனி நடக்கக்கூடாது என்பதே எங்கள் விருப்பம், நோக்கம் ஆகும்.

வாருங்கள், நிகழ்ச்சியில் சந்திக்கலாம். இது உங்களுக்கான நிகழ்ச்சி. நன்றி.

மேலும் விவரங்களுக்கு - எங்கள் வலைப்பூ காண்க. http://balajiicg.blogspot.com/

எங்களைத் தொடர்பு கொள்ளவும் - ஜெ.வீரநாதன், 99444-13782

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக