பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம்
167, போலீஸ் கந்தசாமி வீதி, ஒலம்பஸ்
இராமநாதபுரம், கோயம்புத்தூர் - 641 045
தமிழ்நாடு, இந்தியா
தொலைபேசி - 91+422 2323228
செல்பேசி - 098422-13782
மின்னஞ்சல் - balajiicg@yahoo.com
வலைதளம் - www.veeranathan.com
வலைப்பதிவு - bicg2020.blogspot.com
துவக்கம்
2004ஆம் ஆண்டு கணினி வரைகலைக்குப் பயிற்சி அளிப்பதற்காகவென்றே தனிப்பட்ட நிலையில் துவக்கப்பட்டது (Only and exclusive Training Center for Computer Graphic Designing). இங்கு வேறு எந்த வகையான கணினி பயிற்சியும் தரப்படுவது இல்லை.
அச்சு, விளம்பரம், புகைப்படம், புத்தகப் பதிப்பு மற்றும் பதாகை ஆகிய துறைகளில் (Printing, Advertising, Photography, Book Publication & Flex Printing) பயன்படுத்தப்படும் மென்பொருட்களில் முழுமையான பயிற்சி தரப்படுகிறது.
மென்பொருட்கள்
துவக்க நாட்களில் பேஜ்மேக்கர், கோரல்டிரா மற்றும் போட்டோஷாப் ஆகிய மென்பொருட்களில் மட்டுமே பயிற்சி தரப்பட்டது.
தற்போது (2020) பேஜ்மேக்கர், இன்டிசைன், போட்டோஷாப், இல்லஸ்ட்ரேட்டர், கோரல்டிரா, எம்.எஸ்.ஆபீஸ், பிரீமியர் ஆகிய (PageMaker, InDesign, PhotoShop, Illustrator, CorelDraw, MS Office, Premier) தொழில் முறை மென்பொருட்களிலும், இங்க்ஸ்கேப், ஜிம்ப், லிப்ரே (InkScape, GIMP, Libre) ஆகிய கட்டற்ற மென்பொருட்களிலும் பயிற்சி தரப்படுகிறது.
பயிற்சி முறை
ஒவ்வொரு மென்பொருளுக்கும் தனித்தனியான பயிற்சி தரப்படுகிறது. ஒரு நபர் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மென்பொருளில் பயிற்சி எடுக்க முடியாது. இதனால் பயிற்சி எடுக்கும் மென்பொருளில் முழு கவனம் செலுத்த முடிகிறது.
நமது பயிற்சியில் பாட வகுப்பு மற்றும் செயல்முறை வகுப்பு என்ற இரண்டு பகுதிகளும் உண்டு. மொத்த பயிற்சிக்காலத்தில் பாட வகுப்பு 20 சதவீதமும் 80 சதவீதம் செயல்முறை பயிற்சியாகவும் தரப்படுகின்றன. இதனால் பயிற்சியாளர்கள் ஒவ்வொரு மென்பொருளிலும் அதிக நேரத்திற்கு செயல்முறை பயிற்சி பெறுகின்றனர்.
பாட வகுப்பிற்கு, நமதபயிலகத்திற்காக, நமது பயிலகத்திலேயே, நமது பாடத்திட்டத்தின்படி உருவாக்கப்பட்ட காணொளி பாடங்கள் (வீடியோ) வழியே விளக்கங்கள் தரப்படுகின்றன. இதனால் புரியாத பகுதிகளையும் ஒன்றிற்கு இருமுறை அல்லது புரியும் வரையிலும் பார்த்து தெளிவடைய முடிகிறது. பயிற்சியாளர்களாலேயே தேவையானபடி இயக்கிப் பார்க்க முடிவதால், காணொளி பாடத்தைப் பார்த்துக் குறிப்புகள் எடுத்துக் கொள்ளவும் முடிகிறது.
இதற்குப் பிறகும் பயிற்சியாளர்களுக்கு ஏற்படும் ஐயப்பாடுகள் உடனடியாக, செயல்முறை விளக்கத்துடன் தீர்த்து வைக்கப்படுகின்றன.
நேரில் வந்து பயிற்சி எடுப்பவர்களுக்கு பயிற்சியின் இறுதியில், பயிற்சி முடித்தமைக்கான சான்றிதழ் (Course Completion Certificate) மற்றும் அச்சிட்ட புத்தகம் ஆகியன வழங்கப்படுகின்றன.
பயிற்சி வகைகள்
- கோவையில் உள்ள நமது பயிலகத்திற்கு நேரில் வந்து பயிற்சி எடுப்பதே முதன்மையான சிறந்த வழிமுறையாகும். இதனால் தவிர்க்க முடியாத, கட்டாயமான அதிக நேர செயல்முறை பயிற்சி கிடைக்கிறது. (நமது பயிலகத்திலிருந்து 10 நிமிட நடை தூரத்தில் நல்ல தங்கும் விடுதிகளும் உணவகங்களும் உள்ளன. பெண்கள் உட்பட பயிற்சிக்கு வருபவர்கள் இங்கேயே தங்கிப் பயிற்சி முடித்து செல்லுகின்றன. 3 கிமீ தூரத்தில் தொடரி நிலையம் மற்றும் 5 கிமீ தூரத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகிலும் நிறைய தங்கும் விடுதிகள் தினசரி வாடகை ரூ. 450 முதல் கிடைக்கின்றன. பஸ் வசதி நிறைய உள்ளது.)
- இணையம் வழியாகப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தனி ஒருவருக்காக, நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒன்றுக்கு மேற்பட்டோருக்கு என்று இரண்டு வகைகளிலும் பயிற்சி தரப்படுகிறது. தற்போது ஜூம் செயலி வழியே செயல்முறை விளக்கத்துடன் கூடிய காணொளி பாடங்கள் வழியே பயிற்சி தரப்படுகிறது. கூடுதலாக பயிற்சியாளர்களுக்கு ஏற்படும் ஐயப்பாடுகளைத் தீர்க்க தனியாக செயல்முறையான விளக்கத்துடன் கூடிய கேள்வி பதில் பகுதியாகவும் நடத்தப்படுகிறது.
- மேற்கொண்டு விவரங்கள் தேவையெனில் தயங்காமல் தொடர்பு கொள்ளலாம்.
பயிற்சி காலம்
- நமது பயிலகத்திற்கு நேரில் வந்து பயிற்சி எடுக்கும்போது ஒவ்வொரு மென்பொருளுக்கும் குறைந்த பட்சம் 40 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் பாட வகுப்பும், செயல்முறை வகுப்பும் முறையே 20 - 80 என்ற சதவீத அடிப்படையில் நடத்தப்படுகின்றன.
- இணையம் வழியே நடத்தப்படும் பயிற்சி வகுப்புகள் 6 முதல் 15 நாட்கள் வரையிலும் நடத்தப்படுகின்றன.
- கலந்து கொள்ளும் நபர்களின் ஈடுபாடு, திறமை ஆகியவற்றின் அடிப்படையில் நாட்கள் மாறுகின்றன.
- இதில் தினசரி 20 முதல் 60 நிமிடங்கள் வரையிலும் செயல்முறை பாடவகுப்புகள் காணொளி பாடங்கள் வழியாகவும், சில மென்பொருட்களுக்கு நேரடி செயல்முறை விளக்கவுரையாகவும் நடத்தப்படுகின்றன.
- தினசரி இறுதி நிகழ்ச்சியாக கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. இதனால் பயிற்சியாளர்களுக்கு ஏற்படும் ஐயப்பாடுகள் அன்றன்றே நீக்கப்படுகின்றன.
- ஒவ்வொரு பயிற்சியும் முடிந்த பிறகு, குறைந்தது ஒரு வார கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு மணி நேரம் கேள்வி - பதில் வகுப்பு நடத்தப்படுகிறது. இதில் பயிற்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள ஐயப்பாடுகளுக்கு விளக்கம் தரப்படுகிறது.
- தொடர்ந்து வரும் நாட்களில் ஏற்படும் ஐயங்களை டெலிகிராம் செயலி வழியே அனுப்பி பதில் பெறவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
பயிற்சிக் கட்டணம்
- நமது பயிற்சி வகுப்புகளுக்கான கட்டண முறை மாறுதலுக்குட்பட்டது. எனவே கட்டண விவரம் அறிய தொலைபேசி அல்லது மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.
- கோவையில் நமது பயிலகத்தில் நடத்தப்படும் பயிற்சி வகுப்புகள் - ஒவ்வொரு மென்பொருளுக்கும் தனித்தனியே 40 மணி நேர பயிற்சிக்கு ரூ. 15 ஆயிரம் மட்டும் கட்டணமாகும்.
- இணையம் வழியாக 10 முதல் 15 நாட்கள் வரையிலும் நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளுக்கு ரூ. 1900 முதல் ரூ. 10 ஆயிரம் வரை கட்டணம் ஆகும்.
- இவையே இறுதி அல்ல. மாறுதலுக்குட்பட்டவையாகும்.
பயிற்சி தொடர்பாக வேறு ஐயப்பாடுகளுக்கு பதில் தேவையென்றால் எங்களைத் தயக்கமின்றி தொடர்பு கொள்ள வேண்டுகிறோம். நன்றி.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக