வியாழன், 7 ஏப்ரல், 2011

அடோபி போட்டோஷாப் சிஎஸ்4 - இரண்டு நாள் பயிற்சி வகுப்பு

கோவையில் முதல் முறையாக!

பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம் பெருமையுடன் வழங்கும்
அடோபி போட்டோஷாப் சிஎஸ்4
இரண்டு நாள் பயிற்சி வகுப்புகள்  (தமிழில்)

Balaji Institute of Computer Graphics Proudly Presents
Adobe Photoshop CS4
2 days Training (in Tamil)

நாள் / நேரம்  : 16-04-2011 சனி மற்றும் 17-04-2011 ஞாயிறு
                           இரு நாட்களும் காலை 10:00 முதல் 5:00 மணி வரை

நிகழிடம்* : பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம்
                    167, போலீஸ் கந்தசாமி வீதி, ஒலம்பஸ்,
                    இராமநாதபுரம், கோயம்புத்தூர் - 45

கட்டணம் : ரூ. 1500/- மட்டும் (நபர் ஒருவருக்கு) 
இந்தக் கட்டணம், பயிற்சிக் குறிப்பேடு, ரூ. 350 மதிப்புள்ள போட்டோஷாப் விளக்கப் புத்தகம், இரண்டு நாட்களும் காலை மதியம் தேநீர், மதிய உணவு, பயிற்சியில் கலந்து கொண்டமைக்கான சான்றிதழ், கணினி வரைகலையின் சங்கமம் மாத இதழின் ஒரு இதழ் ஆகியன உட்பட ஆகும்.

அச்சு, புகைப்படம் மற்றும் வலைதளப் பக்க வடிவமைப்பு போன்ற துறைகளில் பெரிய அளவில் பயன்பாட்டில் உள்ளது போட்டோஷாப் மென்பொருள். ஆனால் இதனை பயன்படுத்துகின்ற அளவோ மிகவும் குறைவாகவே உள்ளது. காரணம், இதன் சிறப்புத் தன்மைகள் பற்றிய முழுமையான விளக்கம் கிடைக்காததேயாகும். இதனை நீக்குவதற்காக நமது பயிலகம் மூலமாக முதல் முறையாக இந்த இரண்டு நாள் பயிற்சி வகுப்புகளை ஒருங்கிணைத்து நடத்துகின்றோம்.

எல்சிடி உதவியுடன் பெரிய திரையில், போட்டோஷாப் மென்பொருளின் அனைத்து கட்டளைகள், கருவிகள் பற்றிய விளக்கம் செயல்முறையாகக் காட்டப்படவுள்ளது.
கணினி வரைகலை வடிவமைப்பில் முன்னனுபவம் உள்ளவர்களும், இந்த போட்டோஷாப்வை தற்போது பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களும்  நேரடியாக இந்தப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு போட்டோஷாபை பயன்படுத்தத் தொடங்கலாம்.
இதுபற்றி மேலும் தகவல் மற்றும் கலந்து கொள்ளுவதற்கான விண்ணப்பம் தேவைப்படுவோர் நேரிலோ, தொலைபேசி அல்லது மின்னஞ்சல் வழியாகவோ தொடர்பு கொள்ள வேண்டுகிறோம். பதிவு செய்து கொள்ள கடைசி நாள் 12-04-2011, செவ்வாய்கிழமை ஆகும். நிகழிடத்தில் பதிவு கிடையாது. எனவே முன்னதாக விண்ணப்பித்து உங்கள் பதிவை உறுதி செய்து கொள்ள வேண்டுகிறோம்.

1 கருத்து:

  1. கோயம்புத்தூர் பதிவர்களிடையே ஒரு சிறிய " பதிவர்கள் வட்டம்" என்ற ஒன்று வைத்து அதற்கென்று ஒரு வலைப்பூவும் வைத்து கொள்ளலாம் என்பது எனது யோசனை. முதலில் இப்படி ஒரு வட்டத்தை உறவாக்கிய பின் வரும் காலங்களில் அதனை மேலும் வளர்த்து கொண்டு செல்வதின் சாதக பாதகங்களை பேசிக்கொள்ளலாம். ஒரு சிறிய இதழும் நடத்தி வருகிறேன்., அதனை இங்கே சென்று பார்க்க வேண்டுகிறேன்.

    http://vellinila.blogspot.com/2011/07/blog-post_20.html

    இது குறித்து மேலும் பேச எனது மின்னஞ்சலை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்!

    பதிலளிநீக்கு